Last Updated : 19 Aug, 2015 10:20 AM

 

Published : 19 Aug 2015 10:20 AM
Last Updated : 19 Aug 2015 10:20 AM

காலிஸ்தான் முன்னாள் தலைவர் அமெரிக்காவில் கொலை

அமெரிக்காவில் வசித்து வந்த காலிஸ்தான் முன்னாள் தலைவர் சத்விந்தர் சிங் போலா (52) கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

சீக்கியர்களுக்கு தனிநாடு கேட்டு போராடி வந்த காலிஸ்தான் அமைப்பின் முன்னாள் தலைவர் சத்விந்தர் சிங் போலா. அமிர்தசரஸ் பொற்கோயிலில் ‘ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’ நடவடிக்கைக்குப் பிறகு 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலைக்குப் பிறகு அமெரிக்காவில் குடியேறினார்.

இல்லினாய்ஸ் மாநிலத்தின் பியோரியா நகரில் ‘கிரிஸ் வோல்டு’ என்ற பெயரில் போலா, மளிகை மற்றும் மதுபான அங்காடி நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் தனது குடியிருப்பு வளாகத்தில் காரை நிறுத்தும்போது, மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பிவிட்டனர்.

தப்பியோடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் தெரிய வில்லை. பஞ்சாபில் தீவிரவாத செயல்கள் உச்சத்தில் இருந்த போது, அகில இந்திய சீக்கிய மாணவர் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளராக போலா செயல் பட்டார்.

போலாவின் மாமனாரும் மனித உரிமை ஆர்வலருமான பாபு சூரத் சிங் கல்சா (83), பஞ்சாபில் கடந்த ஜனவரி 16 முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். தண்டனை காலம் முடிந்த பின்னரும் நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைக் கப்பட்டுள்ள 82 சீக்கியர்களை விடுதலை செய்யக் கோரி அவர் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள் ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x