Published : 04 Feb 2020 01:04 PM
Last Updated : 04 Feb 2020 01:04 PM

கென்யாவில் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மாணவர்கள்14 பேர் பலி: ஆசிரியர் மாணவர்களை அடித்ததால் நெரிசல் ஏற்பட்டதா?

கென்யாவில் ஆரம்ப பள்ளி ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 மாணவர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “ கென்யாவில் மேற்கு பகுதியில் உள்ளது காகாமெகா நகரம் இங்கு ஆரம்பப் பள்ளி ஒன்றில் பள்ளி முடிந்த பின் மாணவர்கள் வெளியேறி உள்ளனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மாணவர்கள் 14 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.

கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை.

குழந்தைகள் பள்ளியிலிருந்து வெளியேறும்போது அவர்களை அச்சுறுத்தும் சம்பவம் ஏதும் நடந்ததா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவம் குறித்து மாணவர் ஒருவர் கூறும்போது, “ஆசிரியர்கள் எங்களை அடித்ததால் நாங்கள் ஓடினோம். இதன் காரணமாக ஒருவர் மீது ஒருவர் விழுந்து விபத்து ஏற்பட்டது” என்றார்.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் மீது குற்றம் சுமத்தி உள்ளனர்.

பள்ளியில் ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள் பலியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x