Last Updated : 01 Feb, 2020 04:44 PM

 

Published : 01 Feb 2020 04:44 PM
Last Updated : 01 Feb 2020 04:44 PM

பிரெக்ஸிட்: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதன் விளைவுகள் என்னென்ன? 

பிரஸல்ஸில் ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்துக்கு வெளியே பிரிட்டன் கொடி இறக்கப்படுகிறது. | ஏஎப்பி.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது, இதன் மூலம் தங்கள் பணக்கார உறுப்பு நாடு ஒன்றினை ஐரோப்பிய ஒன்றியம் இழந்து விட்டது.

11 மாத மாற்றக் காலக்கட்டம் வரை பிரச்சினையில்லை பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய தினசரி நடவடிக்கைகலீல் இதுவரை எந்த மாற்றமும் இருக்காது, ஆனால் 2021க்கும் மேல்தான் தெரியவரும்.

லண்டனும் பிரஸல்சும் புதிய ஏற்பாட்டினை நோக்கி தங்கள் உறவுகளைப் புதுப்பித்து கொள்ள வேண்டும், ஆனல் அதுவரை சில நடைமுறை மாற்றங்களைத் தவிர்ப்பதற்கில்லை.

இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் 66 மில்லியன் மக்களை இழந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் தொகை இனி 446 மில்லியன்கள்தான். இதோடு 5.5 மில்லியன் நிலப்பகுதியையும் ஐரோப்பிய ஒன்றியம் இழந்துள்ளது.

மீண்டும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய வேண்டுமெனில் மற்ற வெளி விண்ணப்பதாரர்களுக்குரிய நடைமுறைதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

பிரஸல்ஸில் யூனியன் ஜாக் கொடியை இறக்குவது என்பது தூலமான மாற்றத்திற்கான அறிகுறியாகும். ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகியது, இனி “3ம் நாடுதான்”. கடந்த மே மாதம் ஐரோப்பிய பாராளுமன்றத்துக்காக தேர்வு செய்யப்பட்ட 73 பிரித்தானியர்களுகு இனி அங்கு வேலை இல்லை. இதில் 46 இடங்கள் எதிர்கால ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27 இடங்களை இதுவரை பிரதிநிதித்துவம் அளிக்கப்படாத ஐரோப்பிய நாடுகள் இடம்பெற வாய்ப்புள்ளது.

ஐரோப்பிய கமிஷனுக்காக பிரிட்டன் இனி உயரதிகாரியை நியமிக்க வேண்டிய தேவையில்லை. ஐரோப்பிய கவுன்சில் தலைவர்கள் உச்சி மாநாடுகளுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இனி அழைக்கப்பட மாட்டார். ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் கூட்டங்களில் பிரிட்டன் அமைச்சர்கள் இனி கலந்து கொள்ள மாட்டார்கள்.

ஐரோப்பிய குடிமகன்கள் அல்லாத பிரித்தானியர்கள் இனி பிரஸல்ஸில் மூத்த ஆட்சியதிகாரப் பதவிகளை வகிக்க முடியாது. ஆனால் பலரும் இரட்டைக் குடியுரிமையை ஏற்கெனவே பெற்றுள்ளனர்.

ஆனாலும் மாற்றம் முழுதும் நிறைவடையும் 11 மாத காலம் வரை ஐரோப்பிய யூனியன் பட்ஜெட்டுக்கு பிரிட்டன் நிதி ஆதாரம் அளிக்கும்.

குடிமக்கள் உரிமைகள்:

ஐநா தகவல்களின் படி ஸ்பெயின், அயர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 1.2 மில்லியன் பிரிட்டன் குடிமகன்கள் உள்ளனர்.

அதே போல் பிரிட்டன் புள்ளி விவரக் கணக்குகளின் படி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 2.9 குடிமகன்கள் பிரிட்டனில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவர்களின் நிலை பிரெக்ஸிட்டுக்கு முந்தைய நிலையிலேயே இருக்கும் , பாதிப்பு எதுவும் ஏற்படாது.

ஆனால் பிரிட்டனில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய குடிமகன்களும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பிரிட்டன் குடிமக்களும் உறுப்பு நாடுகள் வகுக்கும் வழிமுறைகளின் கீழ் அதிகாரிகளிடம் புதிதாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

முழுதும் வெளியேறும் நடைமுறை இன்னும் 11 மாதங்கள் நீடிக்கும் என்பதால் அதுவரை சுதந்திர நடைமுறைகள் நீடிக்கும், அதன் பிறகு பிரிட்டனில் இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் தொடர்ந்து அங்கு தங்கள் பணியைத் தொடர்ந்தால் இருக்கலாம்.

ஆனால் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டனுக்கு எதிர்காலத்தில் வருபவர்களுக்கான சுதந்திர குடியேற்றத்தை பிரிட்டன் முடித்து விடும் என்று ஏற்கெனவே பிரிட்டன் அறிவித்துள்ளது. இந்த விஷயங்கள் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படுவதாகும்.

ஆனாலும் பிரிட்டன் தொடர்ந்து ஐரோப்பிய யூனியன் சட்டங்களுக்கும், ஐரோப்பிய நீதிமன்றத்துக்கும் உட்பட்டதுதான், இதுவும் முழுதும் ஆக வெளியேறும் வரை நீடிக்கும் அதற்குள் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண வேண்டி வரும்.

ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறியதால் பிரிட்டன் இந்த நாடுகளுக்கு வெளியே நல்ல சாதகப் பலன்களை அடைய முடியாது என்று ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் ஏற்கெனவே எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x