Last Updated : 30 Jan, 2020 03:56 PM

 

Published : 30 Jan 2020 03:56 PM
Last Updated : 30 Jan 2020 03:56 PM

அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்ததாக 3 இந்தியர்கள் கைது 

அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாக 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நியூயார்க் மாநிலத்தில், அமெரிக்காவின் வடக்கு எல்லைக்கு அருகே அமைந்துள்ள மேசெனா நகரில், எல்லைப்பகுதி ரோந்து போலீசார் அந்த வழியே வந்த வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

அதில் இருந்த 2 பயணிகள் இந்தியர்கள் என்பதும், சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்ததும் கண்டறியப்பட்டதால் கைது செய்யப்பட்டனர். அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரும் இந்தியர் என்பதோடு, அமெரிக்காவிற்குள் 2012-ல் சட்ட விரோதமாக நுழைந்ததால் நாட்டைவிட்டு வெளியேறுமாறு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டவர் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, அமெரிக்க சட்டத்தில் மிகவும் கடுமையாகப் பார்க்கப்படும், அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்புள்ள, ஆள்கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஒவ்வொரு குற்றத்துக்குமே 5 ஆண்டுகள் தண்டனை உள்ளது அமெரிக்காவில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x