Published : 08 Jan 2020 11:01 AM
Last Updated : 08 Jan 2020 11:01 AM

விமான விபத்தில் 180 பேர் பலி: ஈரானிலிருந்து புறப்பட்ட விமானம் விழுந்து நொறுக்கியது

ஈரானிலிருந்து புறப்பட்ட உக்ரைன் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானத்தில் சுமார் 180 பயணிகள் பயணம் செய்தனர்.

இதுகுறித்து ஈரான் அதிகாரிகள், "ஈரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் 737-800 இன்று (புதன்கிழமை) தெஹ்ரானின் புறப்பகுதியில் விபத்தில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து விமானம் தனது தொடர்பை இழந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 180 பேர் பயணம் செய்தனர். விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகி உள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.

விமானத்தைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விமானம் விபத்துக்குள்ளான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இராக்கில் உள்ள அமெரிக்க விமானத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகள் தாக்குதல் நடத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் தற்காப்பு நடவடிக்கைக்காக எடுத்ததாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தெரிவித்தது. இதன் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளதால் அமெரிக்கா - ஈரான் இடைடே பதற்றம் நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x