Published : 02 Jan 2020 12:51 PM
Last Updated : 02 Jan 2020 12:51 PM

ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியது.

இதுகுறித்து ஈரான் அரசு ஊடகம் தரப்பில், “ஈரானின் வடமேற்குப் பகுதியில் , ஆப்கன் எல்லையோரத்தில் சன்கன் நகரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 8 கிலோ மீட்டர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இதுகுறித்து ஈரான் அவசர உதவிக் குழு ஒன்று கூறும்போது , “இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் இல்லை. எனினும் நில நடுக்கத்தினால் பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து எங்கள் குழு விசாரித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு இராக் - ஈரான் எல்லையில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தில் 700-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 2003 ஆம் ஆண்டு ஈரானில் கெர்மன் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு 23,000 பேர் பலியாகினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x