Published : 16 Dec 2019 03:50 PM
Last Updated : 16 Dec 2019 03:50 PM

சவுதியுடன் ரகசியப் பேச்சுவார்த்தை இல்லை: ஈரான்

சவுதி அரேபியாவுடன் ரகசியப் பேச்சுவார்த்தை இல்லை என ஈரான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கும் சவுதிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்காக இரு நாடுகளின் தலைவர்களும் ரகசியப் பேச்சுவார்த்தையை நடத்த இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில் இந்தத் தகவலை ஈரான் மறுத்துள்ளது.

இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகம் தரப்பில், “சவுதி - ஈரான் இடையே ரகசியப் பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக கடந்த சில நாட்களாகப் பரவும் செய்தியில் உண்மை இல்லை. அந்தச் செய்தி வதந்தி மட்டுமே'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா பகுதியில் ஈரான் அணு ஆயுத சோதனைகளை நடத்தியதிலிருந்தே, சவுதி மற்றும் ஈரான் இடையே மோதல் வலுத்து வருகிறது.

ஈரான் - சவுதி மோதல்

முன்னதாக, சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.இந்தத் தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். எனினும் இதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக சவுதி, அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளன. இதனால் ஈரான் - சவுதி இடையே பதற்றம் நீடிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x