Published : 11 Dec 2019 06:21 PM
Last Updated : 11 Dec 2019 06:21 PM

2019-ல் சீனாவில்தான் பத்திரிகையாளர்கள் அதிகம் பேர் சிறையில் அடைப்பு: அறிக்கையில் தகவல்

உலகிலேயே சீனாவில்தான் இந்த ஆண்டு பத்திரிகையாளர்கள் அதிகம் பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பத்தரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பத்திரிகையாளர்கள் சுதந்திரம் நாளுக்கு நாள் குறைக்கப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளவதாக குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு, சீனாவில்தான் இந்த ஆண்டு பத்திரிகையாளர்கள் அதிகம் பேர் சிறையில் அடைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்குழு வெளியிட்ட அறிக்கையில், ''உலகம் முழுவதும் 2019 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 250 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 255 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஆண்டு பத்திரிகையாளர்கள் அதிகம் பேரை சிறையில் அடைத்த நாடு சீனா. சுமார் 48 பத்திரிகையாளர்களை சீனா சிறையில் அடைத்துள்ளது.

அதிபர் ஜி ஜின்பிங் அரசியல் ரீதியாக சீனாவில் தனது கட்டுப்பாட்டை அதிகப்படுத்தியதில் இருந்து இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பெய்ஜிங்கில் நடந்த மாநாடு ஒன்றில் அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங்கிடம் கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு, ''இதில்நம்பகத்தன்மை இல்லை'' என்று அவர் பதில் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x