Published : 30 Oct 2019 07:43 AM
Last Updated : 30 Oct 2019 07:43 AM

லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பயங்கர காட்டு தீ: வீடுகளை விட்டு வெளியேறிய ஹாலிவுட் நட்சத்திரங்கள்

லாஸ் ஏஞ்சலஸ் வனப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ ஹெலிகாப்டர். படம்: பிடிஐ

லாஸ் ஏஞ்சலஸ்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக அப்பகுதியில் வசிக்கும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர் னியா மாகாணத்தில் அமைந்துள் ளது லாஸ் ஏஞ்சலஸ் நகரம். உலகி லேயே பொழுதுபோக்கு அம்சங் களை அதிகமாகக் கொண் டிருப்பதால், ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் லாஸ் ஏஞ்சலஸ் நகரில்தான் நடைபெற்று வருகின்றன. இதனால், ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலர் இங்குதான் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்த நகரின் மேற்கில் அமைந்துள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்திலேயே அந்த தீ, வனப்பகுதி முழுவதும் மளமள வென பரவியது. இதையடுத்து, கலிபோர்னியா மாகாண அரசின் உத்தரவின்பேரில், தீயணைப்புப் படையினரும், பேரிடர் மீட்புப் படையினரும் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட் டனர். ஆனால், அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதையடுத்து, ராணுவமும், விமானப் படையும் இணைந்து ஹெலிகாப்டர் மற்றும் விமானங் களின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்று வருகின்றன. எனினும், காட்டுத் தீ மிகவும் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், வனப்பகுதியை ஒட்டியுள்ள சுமார் 618 ஏக்கர் நிலங்களும், நூற்றுக்கணக்கான வீடுகளும் காட்டுத் தீக்கு முற்றிலும் இரையாகி உள்ளன.

மேலும், தீ பரவ வாய்ப்புள்ள தாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக் கான மக்கள் நேற்று வெளியேற்றப் பட்டுள்ளனர். இவர்களில், அர் னால்டு ஸ்வாஸ்னேகர், கிளார்க் கெர்ஹ், கர்ட் ஸட்டர் உட்பட நூற்றுக் கணக்கான ஹாலிவுட் நட்சத்திரங் களும் அடங்குவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x