Published : 24 Sep 2019 08:56 PM
Last Updated : 24 Sep 2019 08:56 PM

இந்தோனேசிய காட்டுத் தீ; ஒரு கோடி குழந்தைகளின் நிலை என்ன? - ஐ.நா. கவலை

ஜகார்த்தா, ஏ.எஃப்.பி.

இந்தோனேசிய காட்டுட்தீயினால் சுமார் 1 கோடி குழந்தைகளின் உடல்நிலை சிக்கலை எதிர்கொள்வதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. காட்டுத்தீ பெரிய அளவில் புவிவெப்பமடைதலை துரிதப்படுத்தும் பசுமை இல்ல வாயுக்களை வெளியிட்டு வருகிறது.

தெற்காசிய வானில் இந்தக் காட்டுத்தீ நச்சு எரிபொருளை வெளியிட்டு வருகிறது, இதனையடுத்து அங்கு பள்ளிகள், விமானநிலையங்கல் மூடப்பட்டு மக்கள் முகமூடிகளை வாங்குவதும், நுரையீரல் சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதுமாக இருந்து வருகின்றனர்.

இந்தோனேசிய அரசு ஆயிரக்கணக்கான பேரை பணியில் ஈடுபடுத்தி நீர்க்குண்டுகளை காட்டுத்தீ பகுதியில் வீசி வருகின்றனர். காட்டுத்தீ அங்கு வழக்கமானது என்றாலும் இம்முறை வறண்ட வானிலையினால் 2015-ஐ விடவும் மோசமான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

18 வயதுக்குக் கீழ் சுமார் 1 கோடி பேர், இதில் சுமார் 25 லட்சம் பேர் 5 வயதுக்கும் குறைவானவர்கல் சுமத்திரா தீவுகளில் கடும் பாதிப்படைந்துள்ளனர் என்ரு யூனிசெஃப் தெரிவித்துள்ளது.

உடல் நோய் எதிர்ப்புச் சக்தி முன்னேற்றம் அடையாத நிலையில் உள்ள சிறு குழந்தைகளுக்கு இதனால் பாதிப்பு அதிகம், மேலும் கர்ப்பவதிகள் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது குழந்தைகளின் உடல் எடை மிகக் குறைவாக இருக்கும்.

“ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான குழந்தைகள் நச்சுக்காற்றை சுவாசித்து வருவதால் கடும் ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்பட்டு பள்ளிகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் வாழ்நாள் முழுதும் உடல் மற்றும் அறிதல் திறன் பாதிக்கப்படுகிறது” என்கிறது யூனிசெஃப்.

மோசமான காற்று மாசினால் ஆயிரக்கணக்கான பள்ளிகள் இந்தோனேசியாவில் மூடப்பட்டுள்ளன, லட்சக்கணக்கான மாணவர்கள் வகுப்புகளை இழக்கின்றனர்.

காட்டுத்தீயில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஜாம்பி மாகாணத்தில் வானம் ரத்தச் சிகப்பாகக் காட்சியளிக்கிறது. இந்தோனேசியக் காட்டுத்தீயினால் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளும் பாதிப்படைந்துள்ளன.

2015-ஐ காட்டிலும் இந்த முறை காட்டுத்தீ பெரிய அளவில் கரியமில வாயுவை வெளியேற்றி வருகிறது. ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மத்தி வரை சுமார் 360 மெகா டன்கள் கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் வான்வெளிக்கு வெளியேறியுள்ளது.

ஒரு மெகா டன் என்பது 10 லட்சம் டன்களுக்குச் சமமானது. அமெரிக்கப் பொருளாதார நடவடிக்கையின் மூலம் வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு அளவை விட இது அதிகம் என்கிறது ஆய்வு ஒன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x