Published : 09 Sep 2019 04:38 PM
Last Updated : 09 Sep 2019 04:38 PM

'சந்திரயான் 2' தெற்காசிய விண்வெளி ஆராய்ச்சியின் மாபெரும் பாய்ச்சல்: விண்வெளிக்குச் சென்ற முதல் பாக். பெண் பாராட்டு

விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் தரையிரங்கியதற்காக இந்தியாவுக்கும் இஸ்ரோவுக்கும் வாழ்த்துகள் என்று பாகிஸ்தானின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான நமிரா சலீம் என்று தெரிவித்துள்ளார்.

'சந்திரயான் - 2' விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை, தரையிறங்கும் முன்பாக லேண்டருடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இஸ்ரோ தலைவர் சிவன், ‘‘சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் கண்டுபிடிக்கப்பட்டது. லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்ட நிலையில், ஆர்பிட்டர் எடுத்த புகைப்படத்தில் லேண்டர் விக்ரம் இருப்பது தெரியவந்துள்ளது.

ஆனாலும், இன்னும் லேண்டருடனான தொடர்பு ஏற்படுத்தப்படவில்லை. தொடர்ந்து லேண்டருடன் தொடர்பை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இந்தியாவுக்கும், இஸ்ரோவுக்கும் விண்வெளிக்குச் சென்ற முதல் பாகிஸ்தானி என்ற பெருமைக்குரியவர் நமிரா சலிம் பாராட்டு தெரிவித்தார். கராச்சியில் இயங்கும் இதழில் இச்செய்தி வெளியாகியுள்ளது.

அதில் நமிரா சலிம் கூறுகையில், ''நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக தரையிரக்கி வரலாற்றுச் சாதனை புரிந்ததற்காக இந்தியா மற்றும் இஸ்ரோவுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சந்திரயான் -2 விண்வெளி ஆராய்ச்சியில் தெற்காசியாவிற்கான ஒரு மாபெரும் பாய்ச்சலாகும். இது ஆசிய பிராந்தியத்தை மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆரய்ச்சி நிறுவனங்களையும் பெருமைப்படுத்தியுள்ளது.

தெற்காசியாவில் விண்வெளி ஆராய்ச்சி குறித்த சோதனைகள் பல முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. இது இதில் எந்த நாடு முன்னணியில் உள்ளது என்பது முக்கியமில்லை” என்றார்.

-ஐ.ஏ.என்.எஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x