Published : 04 Sep 2019 05:01 PM
Last Updated : 04 Sep 2019 05:01 PM

பாகிஸ்தானில் சீக்கியப் பெண் கட்டாயப்படுத்தி மதமாற்றம்: பெற்றோர்களிடம் செல்ல அனுமதி

முஸ்லிம் இளைஞரை திருமணம் செய்து கொண்ட சீக்கிய பெண் தனது பெற்றோரிடம் மீண்டும் செல்லலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள நங்கனா சாகிப் பகுதியில் சீக்கிய குருத்வாரா தலைவர் பகவான் சிங். அவரது மகள் ஜகஜித் சிங் (வயது 19). சில தினங்களுக்கு முன்பு, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவரை கடத்திச் சென்று அவரை கொடுமை படுத்தியதுடன், துப்பாக்கி முனையில் மிரட்டி கட்டாயப்படுத்தி, இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாக கூறப்படுகிறது.

ஆயிஷா என பெயர் மாற்றப்பட்ட ஜகஜித் கவுர், இஸ்லாமியர் ஒருவருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர் பேசும் வீடியோ காட்சி ஒன்றையும் அந்த கும்பல் வெளியிட்டது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் கடும் கோபமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் வசிக்கும் சீக்கிய சமூகத்தினரும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும், இது தொடர்பாக பாகிஸ்தான் சீக்கிய பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் பிரதமர் இம்ரான் கானை சந்தித்தனர்.

இந்த நிலையில் ஜகஜித் கவுர் தனது பெற்றோரிடம் செல்ல முஸ்லிம் இளைஞரின் குடும்பம் சம்மதித்துள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பஞ்சாப் முதல்வர் அம்ரீத்தர் சிங் கூறும்போதும் “ ஜகஜித் கவுர் தனது இல்லத்திற்கு வந்தடைந்தார். ஜகஜித் கவுருக்காக யாரெல்லாம் குரல் கொடுத்தார்களோ அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண ஆளுநரும் முகமத் சர்வரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x