Published : 19 Aug 2019 07:50 AM
Last Updated : 19 Aug 2019 07:50 AM

ஹாங்காங் மக்களின் ஜனநாயக உரிமையை நசுக்கிவிட்டு காஷ்மீர் விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் சீனா

ஹாங்காங்

ஹாங்காங்கில் ஜனநாயக உரிமை கோரி கடந்த 3 மாதங்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரிட்டனுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ஒதுக்கிவிட்டு, ஹாங்காங் மக்களின் ஜனநாயக உரிமையை நசுக்கி வரும் சீனா, காஷ்மீரில் சுதந்திரம் மறுக்கப்படுவதாக இந்தியா மீது குறை கூறி இரட்டை வேடம் போடுகிறது.

ஹாங்காங் சுமார் 150 ஆண்டு களுக்கும் மேலாக பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த 1997-ல் சீனாவிடம் ஒப்படைக்கப் பட்டது. அப்போது முதல் சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாக ஹாங்காங் இருந்து வருகிறது. ஆனாலும் அதற்கென தனி கரன்சி, கலாச்சார அடையாளம், அரசியல் நடைமுறை ஆகியவை உள்ளன. அங்குள்ள மக்கள் தங்களை சீனர்களாகவே கருதுவதில்லை. ஹாங்காங்கியர்கள் என்றே கூறிக்கொள்கின்றனர்.

ஹாங்காங்கின் சட்ட நடைமுறை கள் பிரிட்டனின் மாதிரியை பிரதி பலிக்கின்றன. ‘ஒரு நாடு, 2 நடை முறைகள்’ என்ற கொள்கையே இதன் தனிச்சிறப்பாக உள்ளது. இதன்படி, அங்கு ஹாங்காங் அடிப்படைச் சட்டம் அமலில் உள் ளது. போராட்ட உரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றை எல்லாம் இது உறுதி செய்கிறது. ஆனால், இந்த உரிமைகள் எல்லாம் சீனாவிலேயே இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஜனநாயக கட்டமைப்பை உருவாக்குவதற்கான உரிமையை ஹாங்காங் அடிப்படைச் சட்டம் வழங்கி உள்ளது. ஆனால் ஜனநாயக உரிமையை வழங்க சீனா மறுத்து வருகிறது. ஹாங் காங் சட்டத்துக்கு புது விளக்கம் அளித்து வருகிறது. அதாவது ஹாங்காங் முழுவதும் தங்கள் எல்லைக்குட்பட்டதுதான் என கூறி வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஹாங் காங்கில் உள்ள ஜனநாயக ஆதர வாளர்கள் போராடி வருகின்றனர். இதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குற்றவாளி களைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொண்டு வந்தார். இந்த மசோதா, ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்கிறது. ஆனால், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் இறங்கினர்.

இந்தப் போராட்டம் தீவிரமடைந் துள்ளது. பல ஆயிரக்கணக் கானோர் வீதிகளில் இறங்கி அமைதியான முறையில் போராடத் தொடங்கினர். ஆனால் போராட்டக் காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். பலர் காயமடைந்தனர். பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் உள்நாட்டுக் கலவரம் பெரிதாகும் சூழல் உருவானது.

5 முக்கிய கோரிக்கைகள்

முழு ஜனநாயக உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது போராட்டக்காரர்களுடைய முக் கிய கோரிக்கையாக உள்ளது. மேலும், போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியது குறித்து விசாரணை நடத்த வேண் டும், கைதிகள் பரிமாற்ற மசோ தாவை நிரந்தரமாக திரும்பப் பெற வேண்டும், கேரி லேம் பதவி விலக வேண்டும், கைது செய்யப் பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என 5 முக்கிய கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். ஆனால் இந்தக் கோரிக்கைகளை ஏற்க ஹாங்காங் நிர்வாகமும், சீனாவும் மறுப்பு தெரிவித்துள்ளன.

வர்த்தக பாதிப்பு

சீனாவின் முக்கிய வர்த்தக பங்குதாரராக ஹாங்காங் விளங்கு கிறது. அத்துடன் சர்வதேச வர்த்தக மையமாகவும் விளங்குகிறது. இந்நிலையில் இந்தப் போராட்டம் காரணமாக வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதத்தின் அறிகுறி

விமான நிலைய வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவது அடிப் படைவாத மற்றும் வன்முறை செயல் என ஹாங்காங் நிர்வா கம் குற்றம்சாட்டி உள்ளது. இது போல, சீன ஊடகங்கள் இந்தப் போராட்டத்தை வேறுமாதிரி சித்த ரிக்கின்றன. போலீஸாருடனான மோதல் சம்பவங்களை மட்டுமே காட்டும் ஊடகங்கள், போராட்டக் காரர்களை வன்முறை கும்பல் என்றும் குற்றவாளிகள் என்றும் கூறுகின்றன. இந்தப் போராட்டம் தீவிரவாதத்தின் அறிகுறி என ஹாங்காங் மற்றும் மக்காவ் பகுதிகளுக்கான சீன செய்தித் தொடர்பாளர் யாங் குவாங் குறிப்பிட்டுள்ளார். போராட்டக்காரர் கள் சட்டத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார். இதனிடையே ராணுவத்தை அனுப்பி போராட்டத்தை ஒடுக்குவது குறித் தும் சீனா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரிட்டன் அரசு ஹாங்காங் நிர் வாகத்தை சீனாவிடம் ஒப்படைத்த போது, இருதரப்புக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், ஹாங்காங் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதாக சீனா ஒப்புக்கொண்டது. ஆனால், ஜி ஜின்பிங் சீன அதிபராக பொறுப்பேற்ற பிறகு, தங்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டு வருவதாக ஹாங்காங் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த சூழ்நிலையில்தான் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு கடந்த 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் ஆகும். ஆனாலும், இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தானும் சீனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அத்துடன் நிற்காமல் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலுக்கு சீனா கோரிக்கை வைத்தது. இதன்படி, நடைபெற்ற ரகசிய ஆலோசனை கூட்டத்தில் இந்தியாவின் நடவடிக்கைக்கு சீனாவைத் தவிர வேறு எந்த நாடும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் சீனாவுக்கு தலைகுனிவுதான் ஏற்பட்டது.

பிரிட்டனுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, ஹாங்காங் மக்களுக்கு ஜனநாயக உரிமையை வழங்க மறுத்து வரும் சீனா, காஷ்மீரில் சுதந்திரம் மறுக்கப்படுவதாக இந்தியா மீது குறை கூறி இரட்டை வேடம் போடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x