Published : 21 Jul 2015 10:17 AM
Last Updated : 21 Jul 2015 10:17 AM

உலகிலேயே முதல்முறையாக அமெரிக்க விமான நிலையத்தில் பிராணிகளுக்கு தனி முனையம்

அமெரிக்காவின் ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் உலகிலேயே முதல்முறையாக செல்ல பிராணிகளுக்காக அதிநவீன தனி விமான முனையம் அமைய உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜான் எப் கென்னடி விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து பல வெளிநாடுகளுக்கும் வெளிநாடு களில் இருந்து அமெரிக்காவும் பல செல்ல பிராணிகள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், செல்ல பிராணிக ளுக்காக மட்டும் தனி விமான முனையம் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. உலகிலேயே முதல் முறையாக விலங்குகளுக்காக எல்லா வசதிகளுடனும் கூடிய தனி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இதன் மூலம் ஆண்டுக்கு 70 ஆயிரம் விலங்குகள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. விலங்குகளுக்கான தனி விமான முனையத்தை ஆர்க் நிறுவனம் கட்ட உள்ளது. மனிதர் களின் விமான நிலையத்தைவிட அதிநவீன வசதிகள் இந்த முனை யத்தில் அமைய உள்ளது. இந்த முனையத்தில் குதிரை, நாய், பசு, பறவைகள், பென்குயின் போன்ற விலங்குகள், பறவைகளுக்கு தனித்தனி இடம் ஒதுக்கப்படும். நட்சத்திர ஓட்டல்களில் உள்ளது போன்ற வசதிகள் விலங்குகளுக்கு ஏற்படுத்தித் தரப்படும்.

சர்வதேச தரத்தில் 1 லட்சத்து 78 ஆயிரம் சதுர அடியில் (16,500 சதுர மீட்டர்) அடுத்த ஆண்டு இந்த விமான முனையம் திறக்கப்பட உள்ளது. இதற்காக சுமார் ரூ.300 கோடி செலவழிக்கப்பட உள்ளது. இங்கு விலங்குகளை குளிப்பாட்ட தனி இடம், பூனைகள் விளையாட மரங்கள், பென்குயின் இணை சேர தனி இடம், தொற்றுநோய் தடுப்பு பிரிவு, 24 மணி நேர மருத்துவ வசதி, தொலைக்காட்சி வசதி போன்ற எல்லா அம்சங் களுடன் விலங்குகளுக்கான தனி விமான முனையம் வடிவமைக் கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x