Last Updated : 24 Jun, 2015 05:13 PM

 

Published : 24 Jun 2015 05:13 PM
Last Updated : 24 Jun 2015 05:13 PM

அமெரிக்கர்களை ஆட்டிப்படைக்கும் உடற்பருமன் பிரச்சினை

அமெரிக்காவில் 75% ஆண்களும் 67% பெண்களும் அளவுக்கதிகமாக உடற்பருமனுடன் வாழ்ந்து வருவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அதாவது, உடல் எடை அதிகமாக இருத்தல் என்பது, ஒரு குறிப்பிட்ட நபர் அவருடைய வயது, உயரத்திற்கேற்ற உடல் எடையுடன் இல்லாமல் வயதை மீறிய உடல் எடையுடன் இருப்பது ஒரு பிரிவினர். மாறாக obese என்பது உடலில் அளவுக்கதிகமாக கொழுப்பு சத்தினால் உடல் சதை போட்டு குண்டாக இருப்பது.

இந்த ஆய்வில், அமெரிக்காவில் உள்ள 40% ஆண்கள் (சுமார் 36.3 மில்லியன் பேர்), 30% பெண்கள் (சுமார் 28.9 மில்லியன் பேர்) அதிக உடல் எடை உடையவர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.

மாறாக, 35% ஆண்கள் (31.8 மில்லியன் பேர்), 37% பெண்கள் (35.8 மில்லியன் பேர்) அளவுக்கதிகமான கொழுப்பினால் சதை போட்டு அளவுக்கதிகமான உடற்பருமன் நோய்க்கு ஆட்பட்டவர்கள்.

மொத்தமாக பார்த்தால் அமெரிக்காவில் அளவுக்கதிகமான கொழுப்புடன் சதைபோட்டு உடற்பருமன் நோய் உள்ளவர்கள் அதிகம் என்றும் வயதுக்கு மீறிய உடல் எடை உள்ளவர்கள் குண்டு மனிதர்களைக் காட்டிலும் குறைவே என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் மருத்துவப் பள்ளி இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

2013-ம் ஆண்டு அமெரிக்க தேசிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆய்வுக் கழகம் வெளியிட்டுள்ள ஆய்வில் சுமார் 7 கோடியே 80 லட்சம் அமெரிக்கர்களுக்கு உடற்பருமன் நோய் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

அதேபோல் அதிக உடல் எடை கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் அமெரிக்காவில் கவலைகளை அதிகரித்துள்ளது. 2 வயது முதல் 5 வயதுடைய குழந்தைகள் மிகவும் உடல் எடை அதிகமாகக் காணப்படுகின்றன. அதாவது இந்த வயதுடையோர் அதிக பருமனுடன் காணப்படுவது கடந்த 30 ஆண்டுகளில் மும்மடங்காகியுள்ளது. அதே போல் 6 வயது முதல் 11 வயதினரும் பயங்கர பருமனாக இருப்பது 3 மடங்குக்கும் அதிகமாகியுள்ளது.

எங்கு பார்த்தாலும் உணவகங்கள், எங்கு பார்த்தாலும் சாப்பிடவும், மது அருந்தவும் அழைக்கும் விளம்பரங்கள், உடலுழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை என்று அமெரிக்காவின் இந்த ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x