Last Updated : 23 Jun, 2015 01:20 PM

 

Published : 23 Jun 2015 01:20 PM
Last Updated : 23 Jun 2015 01:20 PM

பாகிஸ்தானில் அனல் காற்று, வெயில் பலி 400-ஐ தாண்டியது

பாகிஸ்தானில் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் பயங்கர அனல் காற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது. மேலும், பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி கடுமையான அனல் காற்று வீசி வருகிறது. 2 முக்கிய அரசு மருத்துவமனைகளில் மட்டும் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அதிகபட்சமாக கராச்சி நகரம், சிந்து மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து 45 டிகிரி செல்சியஸ் பதிவானதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கராச்சியில் அதிக அளவில் மின்வெட்டு ஏற்படுவதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெயிலுக்கு முதியவர்களே அதிகம் இறப்பவர்களாக உள்ளனர்.

பலருக்கும் காய்ச்சல், நீரிழப்பு நோய், மூச்சூத் திணறல் மற்றும் அஜீரண கோளாறுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை அபாயகரமான அளவில் 400-ஐ கடந்துள்ளது.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, மருத்துவர்களுக்கு விடுப்புகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x