Last Updated : 16 Jun, 2015 01:07 PM

 

Published : 16 Jun 2015 01:07 PM
Last Updated : 16 Jun 2015 01:07 PM

நேபாள நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரம் 3 செ.மீ. நகர்ந்தது

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக எவரெஸ்ட் சிகரம் 3 செமீ. அளவுக்கு நகர்ந்துள்ளதாக சீன புவியியல் கண்காணிப்பு தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சீன புவியியல் கண்காணிப்பு தகவல் மையம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில் உலகின் மிக உயரிய சிகரமான எவரெஸ்ட், 40 செமீ தூரத்துக்கு நகர்ந்து இருந்ததாகவும், ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதியில் இருந்து மே மாதம் 12-ம் தேதி வரை நேபாளத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களுக்கு 3 செமீ அளவுக்கு, மேலும் நகர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்துக்கு சுமார் 9000 பேர் பலியாகினர். பல லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்தனர்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து இமய மலைப் பகுதியில் தொடர் அதிர்வுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதனால் சீனா, நேபாளம் என இரு நாடுகளுக்கும் மையமாக இருக்கும் எவரெஸ்ட் சிகரத்தை மலையேறு வீரர்கள் ஏற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதே சமயம், எவரெஸ்ட் சிகரத்தின் உயரமும் 3 செமீ அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக நிலநடுக்கத்துக்கு பின்னர் எவரெஸ்ட்டின் உயரம் சற்றே குறைந்திருப்பதாக ஐரோப்பாவின் ‘செண்டினெல்-1ஏ என்ற செயற்கைக் கோள் அளித்த தரவுகளுக்கு முற்றிலுமாக மாறாக இந்தத் தகவல் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x