Last Updated : 18 Jun, 2015 10:26 AM

 

Published : 18 Jun 2015 10:26 AM
Last Updated : 18 Jun 2015 10:26 AM

இந்தியாவுடன் பதற்றம் அதிகரிப்பு: பாகிஸ்தானிடம் அமெரிக்கா கவலை- நவாஸ் ஷெரீப்புடன் ஜான் கெர்ரி தொலைபேசியில் பேச்சு

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருவது குறித்து பாகிஸ்தானிடம் நேற்று தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி.

ராம்ஜான் நோன்பு தொடங் கியதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரி வித்தார்.

இந்நிலையில், அமெரிக்க வெளி யுறவு அமைச்சர் ஜான் கெர்ரி நேற்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது கண் கூடாக தெரிகிறது. இது அனைவருக் குமே கவலை தரக்கூடியது. இரு அண்டை நாடுகளுக்கும் இடையே தவறான கணிப்போ, தவறான கண்ணோட்டமோ இருக்கக்கூடாது என ஷெரீபிடம் தெரிவித்தேன்.

இந்த இரு நாடுகளும் ஆசிய பிராந்தியத்தின் நலனுக்கு முக்கிய பங்களித்து வருபவை. இந்நிலையில், இந்த நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவினால் அது சில சக்திகளுக்கு ஊக்கம் தருவ தாக அமைந்துவிடும் என்று தெரி வித்தேன். எனது கருத்தைக் கேட்ட நவாஸ், இதில் நேர்மையாக இருப்பதாகவும் சற்று நேரத்துக்கு முன்பு இந்திய பிரதமரிடம் பேசியதாகவும் கூறினார்.

இதை வரவேற்பதோடு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட் டுள்ள பதற்றத்தை தணிக்க நட வடிக்கை முயற்சி எடுப்போம். இவ்வாறு கெர்ரி தெரிவித்தார்.

அண்மையில் மணிப்பூரில் தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து தீவிரவாதிகளை வேட்டையாட மியான்மருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம்.

இதைச்சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்த மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்த தாக்குதல் பிற நாடுகளுக்கும் ஓர் எச்சரிக்கை என்று குறிப்பிட்டிருந்தார்.

இது பாகிஸ்தானை மனதில் வைத்து சொல்லப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்தியாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர், இந்திய தலைவர்கள் பொறுப் பற்ற வகையில் பேசுவதாகவும் என்ன விலை கொடுத்தாகிலும் நாட்டை காப்பது உறுதி என்று தெரிவித்தார்.

இப்படி இரு நாடுகளிலும் உள்ள தலைவர்கள் வெளியிட்ட கருத்து பெரிய சர்ச்சையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x