Last Updated : 12 Jun, 2015 11:04 AM

 

Published : 12 Jun 2015 11:04 AM
Last Updated : 12 Jun 2015 11:04 AM

மோடி கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்: நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

டாக்கா பயணத்தின்போது பிரதமர் மோடி வெளியிட்ட கருத்து மற்றும் இந்திய தலைவர்களின் சிலரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் செனட் அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அண்மையில் வங்கதேசம் சென் றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் தீவிரவாதத்தை பாகிஸ்தான் தூண்டிவிடுகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானின் செனட் அவையின் தலைவர் ராஜா ஜபாருல்ஹக் அவை யில் தீர்மானம் கொண்டுவந்தார். இந்தியாவின் கொடூர முயற்சிகள் ஏற்கத்தக்கதல்ல. அதன் போர் வெறி மனோநிலையை பாகிஸ் தான் நிராகரிக்கிறது என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இந்தியாவில் உள்ள தலைவர் கள் பாகிஸ்தானுக்கு எதிராக பேசி வருகின்றனர். பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தவும் அஞ்சமாட்டோம் என் றெல்லாம் மிரட்டுகின்றனர் இதை ஏற்க முடியாது என்று தீர்மானம் தெரிவிக்கிறது.

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்தியா அத்துமீறுவதை எப்போதும் அனுமதிக்காட்டோம் என்பதை நாடாளுமன்றம் தெளிவு படுத்துகிறது என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்கு லுக்கு பதிலடி தரும் வகையில் மியான்மருக்குள் புகுந்து வேட்டை யாடியதை குறிப்பிட்டுப் பேசிய இந்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோல் பிற நாடுகளுக்கும் இது ஓர் எச்சரிக்கை என்று கூறி இருந்தார். இது பாகிஸ்தானை மனதில்வைத்துசொல்லப்பட்டது என்று பாகிஸ்தான் தரப்பு கருதுகிறது.

இந்நிலையில் யார் தாக்குதல் நடத்தினாலும் அதற்கு பதிலடிதர பாகிஸ்தான்ராணுவம் தயாராக உள்ளது என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. தீர்மானம் மீதான விவாதத்தை முடித்து பேசிய ஹக், இந்திய பிரதமரின் பேச்சு ஐ.நா. சபை சாசனத்துக்கு எதிரானது.

ஒருபுறம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் இடம்பெற இந்தியா முயற்சி மேற்கொள்கிறது. மறுபுறம் காஷ்மீரில் மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டு ஐநா சாசனத்தை மீறுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x