Last Updated : 22 Jun, 2015 03:29 PM

 

Published : 22 Jun 2015 03:29 PM
Last Updated : 22 Jun 2015 03:29 PM

ஒபாமாவை குறிப்பிட்டு இனவெறி கருத்து: மன்னிப்பு கோரினார் இஸ்ரேல் அமைச்சரின் மனைவி

ட்விட்டரில் அமெரிக்க அதிபர் ஒபாமா குறித்து இனவெறியை தூண்டும் விதத்திலான கருத்தை பகிர்ந்ததற்கு இஸ்ரேல் உள்துறை அமைச்சர் சில்வன் ஷலோமின் மனைவி மன்னிப்பு கோரியுள்ளார்.

இஸ்ரேல் நாட்டு வானொலி வர்ணனையாளரும் அந்நாட்டு உள்துறை அமைச்சரின் மனைவியுமான ஜூடி ஷலோம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒபாமா அருந்தும் காபி, கருப்பாக இருக்குமா அல்லது பலவீணமாக இருக்குமா?" என்று ட்வீட் செய்திருந்தார். நேற்று (ஞாயிறு) மாலை அவர் இந்த கருத்தை ட்வீட் செய்த நிலையில், சமூக வலைதளங்களில் இதற்ககு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. நூற்றுக்கணக்கானோர் ஜூடியை பகிரங்கமாக திட்டத் தொடர்ங்கினர்.

அமெரிக்காவின் அதிபராக இருக்கும் ஒபாமாவை இனரீதியாக காயப்படுத்தும் முட்டாள்த்தனமான கருத்தை மரியாதைக்குரிய பொறுப்பில் இருக்கும் ஜூடி ஷலோம் பகிரலாமா? என்று பலராலும் விமர்சிக்கப்பட்டது.

தொடர் விமர்சனங்களை அடுத்து தனது கருத்தை ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கிய ஷலோம், தான் தவறு செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியுள்ளார்.

"யாரோ எனக்கு அந்த ஜோக்கை கூறினர். அதனை நான் பொறுப்பற்ற முறையில் பகிர்ந்திருக்கக் கூடாது. இனம், மதம், நிறத்தைத் தாண்டி மக்களை நேசிப்பவள் நான். இதில் எனக்கு உள்நோக்கம் இல்லை. செய்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன்" என்று ஜூடி தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ஒபாமா குறித்து கருத்து தெரிவித்து சமூக வலைதளங்களில் ஜூடி ஷலோம் விமர்சிக்கப்படுவது முதல்முறை இல்லை.

ஏற்கெனவே, அமெரிக்க அதிபர் ஒபாமா தனிப்பட்ட முறையிலான ட்விட்டர் கணக்கை ஆரம்பித்து போது, "அமெரிக்க அதிபராக இல்லாமல், ஒபாமாவாக இருந்து நீங்கள் உங்கள் வலிகளை இந்தப் பக்கத்தில் பதிவீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன். இஸ்ரேலிடமிருந்து முத்தங்கள்" என்று கருத்து தெரிவித்து விமர்சனத்துக்கு ஆளானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x