Last Updated : 21 May, 2015 09:10 AM

 

Published : 21 May 2015 09:10 AM
Last Updated : 21 May 2015 09:10 AM

பிரியாணி, செல்ஃபி வார்த்தைகள்: பிரெஞ்சு அகராதியில் சேர்ப்பு

பிரியாணி, செல்ஃபி உள்ளிட்ட வார்த்தைகள் ‘லு பெட்டிட் லரோ' எனும் பிரெஞ்சு அகராதியில் முதன்முறையாக இடம்பிடித்துள்ளன.

அந்த அகராதியின் 2016ம் ஆண்டு பதிப்பில் சுமார் 150 புதிய வார்த்தைகள் சேர்க்கப் படவுள்ளன. அவற்றில் இந்தியாவில் பரவலாகப் புழக்கத்துக்கு உள்ளான ‘பிரியாணி', ‘செல்ஃபி' போன்ற வார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

இந்த அகராதியில் பிரெஞ்சு தத்துவ அறிஞர் பெர்னார்ட் ஹென்றி லெவி, இங்கிலாந்து நடிகர் மைக்கேல் கெய்ன், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற‌ மலாலா, ரொசெட்டா விண்வெளி ஆய்வு நிலையம் மற்றும் பிக்சர் ஸ்டூடியோ உள்ளிட்ட பிரபலமான மனிதர்களும், நிறுவனங்களும் சேர்க்கப்படவுள்ளனர். கோழை, நகைப்புக்குரிய நபர்களைக் குறிக்கும் ‘ஆன் பொலொ' மற்றும் வீடு அலங்கரிப்பு, சமையல் கலை உள்ளிட்டவற்றை விளக்கும் இணைய வீடியோ காட்சிகள், பட விளக்க புத்தகங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் ‘டுடோ' உள்ளிட்ட புதிய பிரெஞ்சு வார்த்தைகள் இந்த அகராதியில் இடம்பெறவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x