Last Updated : 15 May, 2015 02:25 PM

 

Published : 15 May 2015 02:25 PM
Last Updated : 15 May 2015 02:25 PM

காஷ்மீர், அருணாச்சல் இல்லாத இந்திய வரைபடம்: சீன அரசு சேனல் ஒளிபரப்பால் சர்ச்சை

சீன அரசுத் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகளில் இடம்பெற்ற இந்திய வரைபடத்தில் ஜம்மு - காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் இடம்பெறாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தியா - சீனா இடையே பல்வேறு முக்கிய முன்னேற்ற திட்டங்கள், நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கவும் அதன் தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தத் தருணத்தில் சர்ச்சையை கிளப்பும் விதமாக, இந்திய வரைபடத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கு இடையே எல்லைப் பிரச்சினையை ஏற்படுத்த செய்யும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களும் இடம்பெறவில்லை.

இந்தக் காட்சிகள் சீன அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சிறப்பு தொகுப்பில் இடம்பெற்றது இந்திய தரப்பில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அருணாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதிகளை தங்களது நாட்டின் பகுதிகளாக சீனா கூறி வருகிறது. இதனை இந்தியா தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகிறது. இதுவரை இந்தப் பிரச்சினையை தீர்க்க 18 முறை இரு நாடுகளும் சேர்ந்து கூட்டு ஆலோசணை நடத்திய போதிலும் இதற்கு தீர்வு எட்டப்படவில்லை.

இதேபோல, சீனா புதுப்பித்து வெளியிடும் தனது நாட்டு வரைபடத்தில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசமும் அந்த நாட்டுடன் இணைக்கப்பட்டு இருப்பது வழக்கமாக ஏற்படும் சர்ச்சையாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x