Last Updated : 26 May, 2015 10:09 AM

 

Published : 26 May 2015 10:09 AM
Last Updated : 26 May 2015 10:09 AM

சீனாவில் ரூ.960 கோடியில் விண்கல கட்டிடம்: அமெரிக்காவின் `ஸ்டார் ட்ரெக் ரசிகரின் கை வண்ணம்

சீனாவில் `ஸ்டார் ட்ரெக்' எனும் அமெரிக்க அறிவியல் புனைகதை தொலைக்காட்சித் தொடரில் வரும் விண்கலம் போன்ற கட்டிடம் ஒன்றை அந்நாட்டு ரசிகர் ஒருவர் கட்டியுள்ளார்.

அமெரிக்காவில் `ஸ்டார் ட்ரெக்' எனும் விண்வெளி புனைகதை தொலைக்காட்சித் தொடர் மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தத் தொடரில் பல்வேறு விதமான விண்கலங் கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

சீனாவில் வாழ்ந்து வரும் லீ டிஜியன் தீவிர `ஸ்டார் ட்ரெக்' தொடரின் ரசிகர் ஆவார். `நெட் டிராகன் வெப் சாஃப்ட்' எனும் மொபைல் ஆப் டெவலப்பர் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் இவர், மேற்கண்ட தொடரில் இடம்பிடித்த `என்டர்பிரைஸ்' விண்கலம் போன்ற வடிவமைப்பில் தனது அலுவலகத்தைக் கட்டி முடித்துள்ளார்.

சீனாவின் ஃபுசோ நகரத்தில் உள்ள இந்தக் கட்டிடம், வட்டம் மற்றும் குழாய் வடிவங்களாகக் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தைக் கட்டி முடிப்பதற்கு சுமார் ரூ.960 கோடி செலவானதாகக் கூறப்படுகிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x