

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓரேகான் மாகாணம் பெண்ட் நகரில் செயல்படும் சில்வர் ரயில் தொடக்கப்பள்ளியில் 450 மாணவர்கள் படிக்கின்றனர். 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்த சூழலில் நேற்று முன்தினம் துப்பாக்கியுடன் பள்ளி வளாகத்தில் நுழைந்த 16 வயது சிறுவன் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினார். இதில் ஒரு ஆசிரியர் மற்றும் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மகனை பள்ளிக்கு அழைத்து வந்த தந்தை ஒருவர், துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுவனை துப்பாக்கியால் சுட்டார். இதில் அந்த சிறுவன் உயிரிழந்தார். ஒரு ஆசிரியர், ஒரு மாணவர் காயமடைந்தனர்.