Published : 04 Apr 2015 09:03 AM
Last Updated : 04 Apr 2015 09:03 AM

அமெரிக்காவில் கருக்கலைப்பு குற்றத்துக்காக இந்திய பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை: சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

அமெரிக்க நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக சட்டவிரோதமாக கருக்கலைப்பு குற்றச்சாட்டின் பேரில் இந்தியப் பெண் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு மகளிர் நல அமைப்புகளும் சமூகநல ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் சவுத் பெண்ட் நகரம் உள்ளது. இந்த நகரைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் பர்வி படேல் (33). இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

போலீஸ் குற்றச்சாட்டு

கடந்த 2013-ம் ஆண்டில் திருமணத்துக்கு முன்பே பர்வி கருவுற்றார். இதை பெற்றோ ருக்கு தெரியப்படுத்த அஞ்சிய அவர் இணையதளத்தில் கருக் கலைப்பு மாத்திரைகளை வாங்கி உட்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதில் ஏழு மாத கர்ப்பிணியான அவருக்கு கரு கலைந்து குறைப் பிரசவம் ஏற்பட்டதாகவும் உயிரோடு இருந்த சிசுவை குப்பை தொட்டி யில் அவர் வீசியதாகவும் போலீ ஸார் குற்றம் சாட்டுகின்றனர். இதனை மறுத்துள்ள பர்வி, தானாகவே கருக்கலைந்து விட்ட தாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த 2013 ஜூலையில் அதிக ரத்தப்போக்கு காரணமாக அருகில் உள்ள மருத்துவமனையில் பர்வி அனுமதிக்கப்பட்டார். அவர் மீது சட்டவிரோத கருக்கலைப்பு சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

குழந்தை உயிரோடு பிறந் தபோதும் மருத்துவ உதவியை நாடாமல் அந்த குழந்தையை அவர் கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு இண்டியானா நீதி மன்றத்தில் ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

நீதிபதி தீர்ப்பு

நீதிபதி ஹர்லி வழக்கை விசாரித்து சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

பர்வி படேல் படித்த பெண். அவர் தனது கருவை கலைக்க விரும்பினால் சட்டப்பூர்வ மாக அதை செய்திருக்க வேண்டும். ஆனால் தானாகவே கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி உட்கொண் டுள்ளார்.

குழந்தை உயிரோடு பிறந்தும் மருத்துவ உதவி அளித்து அதை காப்பாற்ற முயற்சிக்க வில்லை. மாறாக குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார். இதில் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தக் குற்றத்துக்காக பர்வி படேலுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இறுதியில் பர்விக்கு விதிக்கப் பட்ட 30 ஆண்டு சிறை தண்டனை யில் 10 ஆண்டுகளைக் குறைத்து 20 ஆண்டுகள் அவர் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

நடுநிலையாளர்கள் எதிர்ப்பு

அமெரிக்காவில் 38 மாகாணங்களில் கருக்கலைப்பு தடை சட்டம் உள்ளது. ஆனால் அவை பெயரளவில் மட்டுமே உள்ளன. அந்தச் சட்டத்தில் இதுவரை யாருக்கும் தண்டனை விதிக்கப்படவில்லை.

இதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் சீன வம்சாவளி பெண் ஒருவர் மீது இந்தப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டு சாதாண சட்டப் பிரிவில் ஓராண்டு மட்டுமே அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க நீதித் துறை வரலாற்றில் முதல்முறை யாக இந்திய பெண் பர்வி படேலுக்கு கருக்கலைப்பு தடை சட்டத்தில் சிறை தண்டனை விதிக் கப்பட்டுள்ளது.

இதனை மகளிர் நல அமைப்பு களும் சமூக ஆர்வலர்களும் கடுமை யாகக் கண்டித்துள்ளனர். இது இனவெறியின் வெளிப்பாடு என்று நடுநிலையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மாணவர் அமைப்பின் ஆதரவு

இண்டியானா பல்கலைக்கழக வெளிநாட்டு மாணவர்கள் கூட் டமைப்பின் தலைவர் நகாடா கூறிய தாவது: இதற்கு முன்பு சீன பெண் ஒருவரும் இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். வெளி நாட்டுப் பெண் என்பதால்தான் அவர் மீதும் இப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பல்வேறு வகைகளில் அளிக்கப்பட்ட நிர்பந்தம் காரணமாக இறுதியில் அவருக்கு ஓராண்டு சிறை மட்டுமே விதிக்கப்பட்டது, ஆனால் இந்தியப் பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இண்டியானா மத கூட்டமைப்பு நீதி அமைப்பின் துணைத் தலைவர் சூ எல்லன் கூறியதாவது: பர்வி படேல் கருக்கலைப்பு மாத்திரை களை உட்கொண்டார் என்றோ குழந்தை உயிருடன் பிறந்தது என்றோ போலீஸார் உறுதியாக நிரூபிக்கவில்லை, அப்படியிருக்கும்போது இவ்வளவு பெரிய தண்டனை விதிக்கப்பட்டது ஏன் என்பது புரியவில்லை, பெண்கள், குழந்தைகளின் நலனுக்காக உருவாக்கப்பட்ட சட்டம் இப்போது பெண்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இண்டியானா மாகாணத்தில் இதுபோல் பல்வேறு கெடுபிடியான சட்டங்கள் அமலில் உள்ளன. ஆனால் அவை இனரீதியாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x