Last Updated : 01 Apr, 2015 12:44 PM

 

Published : 01 Apr 2015 12:44 PM
Last Updated : 01 Apr 2015 12:44 PM

உலகிலேயே மிகவும் வயதான பாட்டி ஜப்பானில் மறைவு

ஜப்பானில் தனது 117-வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய உலகின் மிகவும் வயதானவரான மிசாவ் ஒகாவா காலமானார்.

சமீபகாலமாக உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருந்த அவர், உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு ஒகாவா மறைந்ததாக, அவர் தங்கிருந்த காப்பகம் தெரிவித்துள்ளது.

2013-ம் ஆண்டு உலகின் மிகவும் வயதான நபர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஒகாவா இடம் பிடித்தார். அவர் 1898-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி பிறந்தார். அவருக்கு 1919-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவரது கணவர் 1931-ம் ஆண்டே இறந்துவிட்டார். அவருக்கு 4 பேரன்களும், 6 பேத்திகளும் உள்ளனர்.

ஒகாவா தனது 117-வது பிறந்தநாளை கடந்த மார்ச் 5-ஆம் தேதி குடும்பத்தினருடன் கொண்டாடினர். இந்த விழாவை அந்நாட்டு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. அப்போது பேட்டியில், அவர் 'இந்த வயது ஒன்றும் அதிகம் இல்லை' என்று வாழ்க்கை குறித்து ருசிகரமான கண்ணோட்டத்தோடு தெரிவித்தார்.

உலகின் வயதானவரான அவர், தனது இளமை பருவத்தில் ரைட் சகோதரர்கள் பறந்த முதல் விமானப் பயணம், முதலாம் உலகப் போர், நிலாவில் முதலில் இறங்கிய மனிதர் என பல்வேறு காலகட்ட வரலாற்று நிகழ்வுகளை தனது வாழ்நாளில் பார்த்துள்ளார்.

ஒகாவா மூன்று நூற்றாண்டுகளிலும் வாழ்ந்த சில நபர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x