Last Updated : 07 Mar, 2015 10:33 AM

 

Published : 07 Mar 2015 10:33 AM
Last Updated : 07 Mar 2015 10:33 AM

சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா- 12

சவுதியில் செல்வம் மட்டுமல்ல, மக்கள் செல்வமும் அதிகமாகவே அதிகமாகிக் கொண்டிருக்கிறது. வருடத்துக்கு 2 சதவீதம். உலக நாடுகளின் சராசரிப்படி இது மிக அதிகம். 1980-லிருந்து அடுத்த 25 ஆண்டுகளில் மக்கள் தொகை மும்மடங்கு பெருகி இருக்கிறது.

சவுதி அரேபியாவின் விளை யாட்டுத் துறையிலும் சுவாரசியங் கள் உண்டு. சவுதி அரேபியாவின் தேசிய விளையாட்டு கால்பந்து. தேசிய கூடைப் பந்து அணியும் உண்டு. 1999 ஆசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுகளில் வெண்கலப்பதக்கம் பெற்றது கூடைப்பந்து அணி.

2012 ஒலிம்பிக்ஸில் சவுதி அரேபியாவிலிருந்து தடகளப் போட்டிகளில் சில பெண்களும் பங்கேற்றனர். ஆனால் இதற்கு பின்னணி வேறு. ஒலிம்பிக் குழுவில் சவுதி அரேபியா குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. ‘’சவுதி அரேபியா வில் பெண்களுக்கு அளிக்கப்படும் மோசமான நிலையை நீக்க நம்மால் ஆனதைச் செய்ய வேண்டாமா?

ஆண் - பெண் பாகுபாடு காட்டுகிறது என்ற காரணத்தைக் காட்டி சவுதி அரேபியாவின் ஆடவர் பிரிவுகளுக்கும் தடை போட்டால் என்ன?‘. இந்த விவாதத்தின் முடிவு குறித்து கவலைப்பட்ட சவுதி அரேபியா மகளிர் பிரிவு என்ற ஒன்றையும் அனுப்பத் தீர்மானித்தது.

சவுதி அரேபியாவின் தேசிய விலங்கு பாலைவனக் கப்பலான ஓட்டகம். விலை உயர்ந்த காரை வைத்திருப்பவர்களை விட சொந்த மாக ஒட்டங்களை வளர்ப்பவர் களைத்தான் சவுதி அரேபியாவில் பெரும் பணக்காரர்களாக ஏற்றுக் கொள்வார்கள்.

ரியாத் நகரில் நடக்கும் ஒட்டகச்சந்தை மிகவும் பிரபலம். சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் நூறு ஒட்டகங்கள் விற்பனையாகும். போக்குவரத்து, உணவு ஆகியவை தவிர, வேறொரு விஷயத்திற்கும் ஒட்டகம் பயன்படுகிறது. சவுதி அரேபியாவில் ஆண்டு தோறும் நடைபெறும் ஒட்டகப் பந்தயம் மிகவும் பிரபலம். 19 கிலோமீட்டர் நீளம் கொண்டது அந்தப் பந்தயத் தளம். சுமார் இரண்டாயிரம் ஒட்டகங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்கின்றன.

மற்றொரு விபரீத விளை யாட்டும் சவுதி அரேபியாவில் வெகுவாக பிரபலமாகிக் கொண்டு வருகிறது. அது Sidewalk skiing. அதாவது, காரின் ஒரு பக்கத்திலுள்ள இரண்டு சக்கரங்கள் மேலெழும்பி இருக்க மீதி இரண்டு சக்கரங்கள் மட்டும் பூமியில் சுற்றும் நிலையில் காரை ஓட்டுவது.

இது போதாதென்று அந்த நிலையில் ஒருவர் காரை ஓட்ட, மற்றவர் அந்தக் காரிலிருந்து வெளியேறி, சாய்ந்த நிலையில் இருக்கும் மேற்புறத்தில் உட்கார்ந்து கொண்டும், நின்றபடி பேலன்ஸ் செய்து கொண்டும் வித்தை காண்பிப்பார்.

இதில் இன்னொரு வித்தையும் அறிமுகமாகி இருக்கிறது. கார் மேலே குறிப்பிட்டபடி ஓடிக்கொண்டிருக்கும் அதே நிலையில் தரையைத் தொடாமல் இருக்கும் இரண்டு சக்கரங்களையும் சாகசக்காரர் மாற்றிப் பொருத்த வேண்டும்.

உலகின் மொத்த பெட்ரோலிய வளத்தில் 18 சதவிகிதத்தை தன்னிடம் கொண்டிருக்கிறது சவுதி அரேபியா. அந்த நாட்டின் பொருளாதாரமே பெட்ரோலியத் தைக் கொண்டுதான் தீர்மானம் செய்யப்படுகிறது என்றால் அது மிகையல்ல.

அதன் மொத்த தேசிய வளத்தில் 50 சதவிகிதம் பெட்ரோலும், எரிவாயுவும்தான்.

உலகின் மிக அதிகமான பெட்ரோலிய வளம் கொண்ட நாடு என்ற பெருமையை மிக நீண்ட வருடங்களுக்குக் கொண்டிருந்தது சவுதி அரேபியாதான். ஏற்றுமதி மூலம் சவுதி அரேபியாவுக்கு வந்து சேரும் நிதியில் 85 சதவிகிதம் பெட்ரோலியத்தின் மூலமாகத்தான். இரும்புத் தாது, தாமிரம், தங்கம் போன்ற வையும் சவுதி அரேபியாபிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மார்ச், 1938-ல்தான் சவுதி அரேபியாவின் முதல் பெட்ரோலியக் கிணறு கண்டெடுக்கப்பட்டது. தம்மம் என்ற பகுதியில் 1440 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டது இந்தப் பெட்ரோலியக் கிணறு.

ஒரு காலத்தில் சில உலகளாவிய நிறுவனங்கள்தான் உலகின் பெட்ரோல் சந்தையை தீர்மானித்துக் கொண்டிருந்தன. இவற்றை ‘ஏழு சகோதரிகள்’ என்று என்ரிகோ மட்டே என்ற ஒரு தொழிலதிபர் குறிப்பிட, அதற்குப் பிறகு அந்த விவரிப்பைப் பலரும் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

உலகின் மொத்த பெட்ரோலிய வளங்களில் 85 சதவிகிதத்தை தங்களிடம் கொண்டிருந்த இந்த ஏழு நிறுவனங்களும்தான் அப்போது பெட்ரோலியப் பொருட்களின் விலையைத் தீர்மானித்தன. ஆனால் இந்த ஆதிக்கம் கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.

1960-ல் உருவானது ஒபெக் என்ற அமைப்பு. அதாவது பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு. இதன் உறுப்பினர்களான நிறுவனங்கள் தங்களுக்குள் பல விஷயங்களில் உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டன. எந்த ஒரு நிறுவனமும் தன்னிச்சையாக பெட்ரோலிய விலையை குறைக்கக் கூடாது என்பது அவற்றில் முக்கியமான ஒன்று.

இன்று இந்த அமைப்பின் அசைக்க முடியாத உறுப்பினராக விளங்குகிறது சவுதி அரேபியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x