Last Updated : 24 Feb, 2015 09:15 PM

 

Published : 24 Feb 2015 09:15 PM
Last Updated : 24 Feb 2015 09:15 PM

மாயமான எம்எச்-370 விமானம் வேண்டுமென்றே அண்டார்டிகா நோக்கி திருப்பப்பட்டது: நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸைச் சேர்ந்த எம்எச்370 விமானம் வேண்டுமென்றே அண்டார்டிகாவை நோக்கி திருப்பப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மலேசியா ஏர்லைன்ஸைச் சேர்ந்த எம்எச்370 விமானம் அதில் பயணம் செய்த 239 பேரோடு மர்மமான முறையில் காணாமல் போய் ஓராண்டை நெருங்கும் நிலையில் அவ்விமானம் வானில் சென்றுகொண்டிருக்கும்போதே மர்மநபர் ஒருவர் விமானியின் இடத்தில் இருந்துகொண்டு அந்த விமானத்தை அண்டார்டிகாவை நோக்கி ஓட்டிச் சென்றுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புதியதாக வெளியான ஆவணப்படம் ஒன்றில் விமானப்போக்குவரத்து வல்லுநர்கள் இக்கருத்தை கூறியுள்ளனர். இந்த விமானம் அண்டார்டிகா நோக்கி வேண்டுமென்றே செலுத்தப்பட்டதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

ஓராண்டுக்குப் பிறகு

விதியின் பிடியில் சிக்கிய இந்த விமானம் 90 நிமிடங்களில் வானில் மூன்றுமுறை துல்லியமாக திரும்பியது. அச்சமயம் விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்ததால் விமானிகளை தொடர்புகொள்ளமுடியவில்லை என நேஷனல் ஜியாகிராபிக் தயாரித்துள்ள 'மலேசியன் 370: வாட் ஹேப்பண்ட்' என்ற ஆவணப்படத்தில் இந்த விமான விபத்தைப் பற்றி புலனாய்வு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மலேசியா-பீஜிங் கூட்டு விமானம் காணாமல் போன சரியாய் ஓராண்டு ஆகிய மார்ச் 8 அன்று இப்படம் திரையிடப் பட உள்ளது.

இது விபத்தல்ல

செயற்கைக்கோள் தகவல்கள் அடிப்படையில் ஆய்வுசெய்த நிபுணர்கள் வினோதமான திருப்பங்களோடு இவ்விமானம் தோராயமாக 180 டிகிரிக்கு சுழன்றது. பின்னர் புதிய பாதையில் பயணித்தது. அதேநேரம் இது விபத்தல்ல என்று உறுதியாக தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

இதை கருத்தில்கொண்டு பார்த்தால் விமானத்தைக் கடத்துவதின் ஒரு பகுதியாகவே அந்த விமானி வேண்டுமென்றே விமானத்தை இயக்கும் கருவியின் குறிப்பிட்ட பகுதியில் அழுத்தம் நீக்கம் செய்து ஏதோ ஒரு காரணத்திற்காக விமானத்தை கொண்டு சென்றுள்ளதாக விமானப் போக்குவரத்து நிபுணர் மால்காம் பிரென்னர் கூறினார்.

மர்மம் நீங்கவில்லை

ஐந்து இந்தியர்கள் உள்ளிட்ட 230 பயணிகளோடு காணாமல் போன இவ்விமானத்தை பன்னாட்டு தேடுகுழுக்கள் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. விமானப் போக்குவரத்தின் வரலாற்றிலேயே முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு கடைசிவரை மர்மம் நீடித்தது.

மர்மமாக காணாமல் போவதற்கு முன்வரை விமானம் பறந்துசென்றதை செயற்கைகோள் புள்ளிவிவரங்களைக் கொண்டு அறியமுடிந்தது. ஆனால் சில மணிநேரங்களுக்குப்பிறகு விமானக் கட்டுப்பாட்டுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

'என்னுடைய 40 ஆண்டு விமானப் போக்குவரத்துப் பணியில் உலகத்தையே தன் பக்கம் இழுத்த இந்த விமான விபத்தைப்போல் நான் வேறொன்றை கண்டதில்லை' என்று மிர்ரர் கூறியதை மேற்கோள் காட்டிப் பேசிய பிரென்னர் ஆவணப்படத்தில் தெரிவித்தார்.

மூன்று விமான விபத்துகள்

இந்த விமானத்தை முன்னின்று மீட்டெடுக்க முயன்றவர் ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புக் கழகத்தின் ஆணையர் மார்டின் டோலன் என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. எம்எச்370 விமானம் காணாமல் போன இந்த சம்பவம், ஒரே ஆண்டில் நடைபெற்ற மூன்று விமானப் போக்குவரத்துச் சோகங்களில் முதலாவது ஆகும்.

இரண்டாவதாக, கடந்த ஆண்டு ஜூலை 17 அன்று ஆம்ஸ்ட்ர்டாம்மிலிருந்து கோலாலம்பூர் சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால் விமானம் முறிந்து அதில் இருந்த 283 பயணிகளும் 15 விமானப் பணியாளர்களும் உயிரிழந்தனர்.

மூன்றாவதாக, டிசம்பர் மாதம், இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு ஒரு குறுகிய பயணத்தை மேற்கொண்ட ஏர்ஏசியா QZ8501 விமானம் மோசமான வானிலை மாற்றம் காரணமாக 162 பயணிகளோடு ஜாவா கடலில் இறங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x