Last Updated : 08 Feb, 2015 11:13 AM

 

Published : 08 Feb 2015 11:13 AM
Last Updated : 08 Feb 2015 11:13 AM

சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா: போலீஸாரை தாக்கியதாக 3 இந்திய வம்சாவளியினர் கைது

சிங்கப்பூர் நாட்டில் தைப்பூசத் திரு விழாவின்போது போலீஸாரைத் தாக்கியதாக அந்நாட்டைச் சேர்ந்த 3 இந்திய வம்சாவளியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமச்சந்திரன் சந்திரமோகன் (32), ஜெயக்குமார் கிருஷ்ணசாமி (28) மற்றும் குணசேகரன் ராஜேந்திரன் (33) ஆகியோர் தைப்பூசத் திருவிழாவின்போது நடந்த பாதயாத்திரையில் மோசமாக நடந்துகொண்டதாக அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூவரையும் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸார் நேற்று நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தினர். தற்போது ஜாமீனில் உள்ள அவர்கள், மார்ச் 6-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தின் முன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சிங்கப்பூர் நாட்டு சட்ட அமைச்சர் கே.சண்முகம் இதுகுறித்து கூறும்போது, "சிங்கப்பூரில் இந்துக்கள் எந்த விதத்திலும் வேறுபடுத்தப்படவில்லை. 1964-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு கலவரத்தைத் தொடர்ந்து இங்கு எந்த விதமான மத பாதயாத்திரைகள் மேற்கொள்வதற்கும் அனுமதியில்லை. எனினும் தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் தீ மிதி ஆகிய திருவிழாக்களின்போது மட்டும் இந்துக்களுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும், "காவல்துறையினர் நம்மைப் பாதுகாக்கிறார்கள். ஆனால் அவர்களை நாம் தரக்குறைவாக நடத்தக் கூடாது. காவலர்கள் தவறு செய்திருந்தால் அவர்களைத் திருத்துவது நமது பொறுப்பு. ஆனால் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது சகித்துக்கொள்ள முடியாதது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x