Last Updated : 12 Feb, 2015 12:52 PM

 

Published : 12 Feb 2015 12:52 PM
Last Updated : 12 Feb 2015 12:52 PM

அமெரிக்காவில் 3 இஸ்லாமிய மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர். சம்பவத்தில் ஈடுப்பட்ட நபர் தானாக முன்வந்து சரணடைந்தார்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள மேற்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் சிரியா நாட்டைச் சேர்ந்த தேஹா பராகத் (23) அவரது மனைவி யுசூர் முகமது (21), அவரது தங்கை ரசன் அபு சல்ஹா (19) ஆகியோர் படித்து வந்தனர்.

இவர்கள் 3 பேரும் பல்கலைக்கழக சாப்பல் ஹில் கட்டடத்தில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் க்ரேக் ஸ்டீஃபன் என்ற நபர் இவர்கள் மூன்று பேர் மீதும் செவ்வாய்க்கிழமை மாலை துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அந்த மூன்று பேரும் பலியாகினர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுப்பட்ட க்ரேக் ஸ்டீஃபன் தானாக முன்வந்து போலீஸாரிடம் சரணடைந்துள்ளார். இவர் தன்னை ஒரு நாத்திகர் என்று அறிமுகப்படுத்திக்ககொண்டார்.

கரோலினா பகுதியில் நடந்த இந்த பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதனால் இந்த சம்பவம் மத வெறுப்புத் தன்மையால் ஏற்பட்டிருக்கலாம் என்ற வகையில் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இது குறித்து மேற்கு கேரோலினா பல்கலைக்கழக ஆசிரியர் கூறும்போது, "இந்த சம்பவம் நடந்தது எங்களுக்கு வருத்தம் அளிப்பதாக உள்ளது. அமெரிக்காவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மனப்பான்மை நிகழ்வதும், சுட்டுக் கொல்லப்பட்ட நபர்கள் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் இதனை பல்வேறு கோணத்தில் அணுக வேண்டியுள்ளது. பலியான மூன்று மாணவர்களும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கியவர்களாக இருந்தனர்.

இதனை அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

சரணடைந்த க்ரேக் ஸ்டீஃபனின் ஃபேஸ்புக் பக்கத்தின் அட்டைப் புகைப்படத்தில் 'சமத்துவத்துக்கான நாத்திகர்கள்'என்ற புகைப்படம் உள்ளது. மேலும் அவரது நிலைப் பகிர்வுகள் அனைத்தும் மதக் கோட்பாடுகளுக்கு எதிரானதாகவும் விமர்சிக்கும் வகையிலும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x