Published : 07 Jan 2015 10:26 am

Updated : 07 Jan 2015 10:26 am

 

Published : 07 Jan 2015 10:26 AM
Last Updated : 07 Jan 2015 10:26 AM

குவா குவா வாத்து - குழந்தைப் பாடல்

குவா குவா வாத்து

குள்ளமான வாத்து

ஆகா என்ன அழகு

அசைந்த நடை அழகு!குவா குவா வாத்து

கூடிச் செல்லும் வாத்து

யாவ ரையும் ஈர்க்கும்

அழகு நிறைந்த வாத்து!கரையில் வந்து நிற்கும்

குவா குவான்னு கத்தும்

இரையாய் நத்தை தின்னும்

இன்னும் பலவும் தேடும்!தூவல் வாலை ஆட்டும்

தலையைத் தலையை நீட்டும்

ஆவலாய் நீரில் நீந்தும்

ஆர்வமாய்ப் பார்த்து மகிழ்வோம்!

- ரதபுரி உ.ராமநாதன், நாகர்கோயில்

குழந்தைப் பாடல்வாத்துப்பாட்டுகுளம்குவா குவா

You May Like

More From This Category

More From this Author