Last Updated : 31 Jan, 2015 10:43 AM

 

Published : 31 Jan 2015 10:43 AM
Last Updated : 31 Jan 2015 10:43 AM

நெதர்லாந்தில் தொலைக்காட்சி நிலையத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்

நெதர்லாந்து நாட்டில் ஹில்வர்சம் எனும் நகரத்தில் உள்ள என்.ஓ.எஸ். எனும் தொலைக்காட்சி நிலையத்துக்குள் நேற்று முன்தின இரவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

என்.ஓ.எஸ். தொலைக்காட்சி நிலையத்தில் பணியில் இருந்த பாதுகாவலரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி நிலையத்தின் உள்ளே மர்ம நபர் ஒருவர் புகுந்தார். பின்னர் அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் செய்தி நேரம் எப்போது என்று கேட்டு மிரட்டியுள்ளார்.

இதற்குள் தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று அவரைப் பிடித்தனர். விசாரணையின்போது அவர் 19 வயதான இளைஞர் என்றும், அவர் தி ஹேக் நகரத்துக்கு அருகில் உள்ள பகுதியில் இருந்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும், தன்னை `ஹேக்கர்ஸ் கலெக்டிவ்' என்ற அமைப்பைச் சேர்ந்தவன் என்று கூறியதோடு, தன்னிடம் நிறைய வெடிகுண்டுகள் இருப்பதாகவும், தனக்குப் பின்னால் ஒரு கூட்டம் இருப்பதாகவும், நாட்டின் இணையதளங்களை முடக்க 98 ஹேக்கர்கள் தயாராக இருப்பதாகவும், நாடு முழுக்க வெவ்வேறு இடங்களில் கதிரியக் கத் தாக்கம் கொண்ட வெடிகுண்டு களை புதைத்து வைத்திருப்பதா கவும் போலீஸாரிடம் கூறினான்.

அந்த நபரைக் கைது செய்த போலீஸார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் காரணமாக அந்தத் தொலைக்காட்சி நிலையத்தின் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணி செய்திகள் ஒளிபரப்பாவது தடைபட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x