ஈரானின் டெஹ்ரானில் நடைபெறும் கமேனியின் இறுதிச் சடங்கில் 3 மகன்கள் பங்கேற்பு

புதிய உச்ச தலைவர் மோஜ்தபா பங்கேற்கவில்லை
ஈரானின் டெஹ்ரானில் நடைபெறும் கமேனியின் இறுதிச் சடங்கில் 3 மகன்கள் பங்கேற்பு
Updated on
1 min read

டெஹ்ரான்: ஈ​ரானின் மறைந்த உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி கமேனி​யின் இறு​திச்​சடங்கு பிரார்த்​தனை தலைநகர் டெஹ்ரானில் நேற்று நடை​பெற்​றது. இதில் லட்​சக்​கணக்​கான மக்கள் திரண்டு அஞ்​சலி செலுத்​தினர்.

கமேனி​யின் மகன்​களான முஸ்​த​பா, மீசம் மற்​றும் மசூத் கமேனி ஆகியோர் இறு​திச்​சடங்​கில் பங்​கேற்​றனர். ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன், நாடாளு​மன்ற சபா​நாயகர் மற்​றும் புரட்​சிகர பாது​காப்​புப் படை (ஐஆர்​ஜிசி) தளபதி ஆகியோ​ரும் இதில் கலந்து கொண்​டனர்.

இருப்​பினும், கடந்த மார்ச் மாதம் ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்​பேற்ற கமேனி​யின் மற்​றொரு மகனான அயத்​துல்லா மோஜ்தபா கமேனி இந்த நிகழ்​வில் பங்கேற்கவில்லை. இது அவர் எங்​கு, எப்​படி உள்​ளார் என்ற கேள்வியை எழுப்​பி​யுள்​ளது.

புதிய உச்ச தலைவர் அயத்துல்லா மோஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து ஈரான் அரசுத் தரப்பில், “அவருக்குப் பெரிய அளவிலான முகச்சிதைவோ அல்லது உறுப்பு இழப்போ ஏற்படவில்லை, அவர் நலமாக உள்ளார்” என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தாலும், அவர் தொடர்ந்து மக்கள் பார்வையில் படாமல் இருப்பது ஈரான் மக்களிடையே பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

கடந்த பிப்​ர​வரி 28 அன்று இஸ்​ரேல்​-அமெரிக்கா நடத்​திய வான்வழித் தாக்​குதலில் கமேனி கொல்​லப்​பட்​டார். அந்​தத் தாக்​குதலில் மோஜ்த​பா​வும் கடுமை​யான காயமடைந்​த​தாகக் கூறப்படு​கிறது. இஸ்​ரேல் அவரை மீண்​டும் இலக்கு வைக்கக்கூடும் என்ற பாதுகாப்பு அச்​சுறுத்​தல் காரண​மாக, அவர் பொது​வெளி​யில் வரு​வதைத் தவிர்த்​துள்​ள​தாக பாது​காப்​புப் படை அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். அவரது குரல் பதிவைக் கூட வெளி​யிட வேண்​டாம் என பாது​காப்பு அதி​காரி​கள் அறிவுறுத்தியுள்​ளனர்.

கமேனி​யின் உடல் ஈரானின் பல்​வேறு நகரங்​களுக்​குக் கொண்டு செல்​லப்​பட்​டு, வரும் ஜூலை 9-ம் தேதி அவரது சொந்த ஊரான மஷ்ஹாத்​தில் அடக்​கம் செய்​யப்பட உள்​ளது. அந்த நிகழ்​வில் மோஜ்தபா கலந்​து​கொண்டு பிரார்த்​தனை செய்ய விரும்புவதாகக் கூறப்​படு​கிறது. ஈரானிய தேசி​யக் கொடி போர்த்தப்​பட்​டு, அதன் மீது கருப்பு நிற தலைப்​பாகை வைக்​கப்​பட்​டிருந்த கமேனி​யின் சவப்​பெட்​டி, கடந்த பிப்​ர​வரி மாதத் தாக்குதலில் கொல்​லப்​பட்ட அவருடைய உறவினர்​கள் நால்​வரின் சவப்​பெட்​டிகளுக்கு அரு​கருகே வைக்​கப்​பட்​டிருந்​தது.

வான்​வழித் தாக்​குதலுக்​குப் பலி​யான அந்த உறவினர்​களில், கமேனி​யின் பேத்​தி​யும்​ ஒரு​வர்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது. போர்ச் சூழல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த முன்னாள் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள், தற்போதைய தற்காலிகப் போர் நிறுத்தக் காலத்தில் ஜூலை 4 முதல் தொடங்கி ஒரு வாரம் வரை நடைபெற திட்ட மிடப்பட்டுள்ளது.

ஈரானின் டெஹ்ரானில் நடைபெறும் கமேனியின் இறுதிச் சடங்கில் 3 மகன்கள் பங்கேற்பு
ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in