Published : 01 Jan 2015 02:48 PM
Last Updated : 01 Jan 2015 02:48 PM
வட கொரிய தலைவர் சர்வாதிகாரி கிம் ஜாங் உன் மீது கட்டப்பட்டுள்ள பிம்பத்தை உடைக்கும் விதமாக, பலூன்கள் மூலம் வட கொரியாவில் `தி இன்டர்வியூ' படத்தின் டி.வி.டி.க்களை இறக்க தென் கொரியா திட்டமிட்டுள்ளது.
வட கொரியாவின் தற் போதைய தலைவர் கிம் ஜாங்கை கொல்ல சதித் திட்டம் தீட்டுவது போன்ற திரைக்கதை அமைப்புடன் கடந்த வாரம் `தி இன்டர்வியூ' எனும் திரைப்படம் வெளியானது.
இத்திரைப்படத்தை வெளி யிடாமல் செய்யும் முயற்சியாக, சோனி நிறுவனத்தின் கணினி களை முடக்கிவிட்டதாக வட கொரியாவின் மீது அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. அதனை வட கொரியாவும் எதிர்த்து வருகிறது.
இந்நிலையில் தென் கொரி யாவைச் சேர்ந்த உரிமைப் போராளி பார்க் சாங் என்பவர், சுமார் 1 லட்சம் `தி இன்டர்வியூ' திரைப்படத்தின் சுமார் 1 லட்சம் டி.வி.டி.க்களை பலூன்கள் மூலம் ஜனவரி மாதம் வட கொரியாவில் பரப்ப இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT