Last Updated : 09 Dec, 2014 12:43 PM

 

Published : 09 Dec 2014 12:43 PM
Last Updated : 09 Dec 2014 12:43 PM

அமெரிக்காவில் கார் விபத்து: 5 இந்திய மாணவர்கள் படுகாயம்

அமெரிக்காவில் காருடன் லாரி மோதி பயங்கர விபத்தில் சிக்கி இந்தியாவைச் சேர்ந்த 5 பொறியியல் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இந்திய மாணவர்கள் அங்கிருந்து நியூஓர்லியான் பகுதிக்கு காரில் சென்றபோது எதிர் சாலையில் லாரி ஒன்று வந்தது. அதனை தவிர்க்க கார் ஓட்டுனர் முயன்றபோது இந்த பயங்கர விபத்து ஏற்பட்டதாக உள்நாட்டு செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பிரணன் கண்ணன்(22), அக்‌ஷே ஜெய்ன்(22), சிரஞ்சீவி பியோ(23), ஷாசித் ஐயர்(23), கிஷண் பஜாஜ்(24) என்ற மாணவர்களே விபத்தில் சிக்கியவர்கள் என்று தெரியவந்துள்ளது.

படுகாயம் அடைந்த அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இதில் அக்‌ஷே ஜெய்ன் மற்றும் கிஷண் பஜாஜ் ஆகிய மாணவர்களின் நிலை மோசமாக இருந்த நிலையில் அவர்கள் இருவரும் உயிர்காக்கும் ஹெலிகாப்டர் உதவியுடன் ஹெர்மென் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய கார் ஓட்டுனரின் நிலை சீராக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே விபத்தில் சிக்கிய மாணவர்களின் பெற்றோர்களை வரவழைக்கவும், சிகிச்சைக்கான செலவுகளுக்கு நிதி திரட்டும் நடவடிக்கைகளையும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அதிக வேகமோ அல்லது மதுபோதையோ விபத்து நடக்க காரணம் இல்லை என்று நம்பப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x