Published : 05 Dec 2014 12:09 PM
Last Updated : 05 Dec 2014 12:09 PM

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி பயிற்சி ஆட்டத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியின் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது.

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்தில் நாளை தொடங்குகிறது. அதை முன்னிட்டு பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடினர். அதேநேரத்தில் ஆஸ்திரேலியாவும் போராடியது. எனினும் முதல் இரு கால் ஆட்ட நேரத்தில் இரு அணிகளாலும் கோலடிக்க முடியவில்லை. பின்னர் நடைபெற்ற 3-வது கால் ஆட்டத்தில் குர்ஜிந்தர் சிங்கும், எஸ்.வி.சுநீலும் கோலடிக்க, இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

இந்தியாவின் வெற்றி குறித்துப் பேசிய அணியின் உயர் செயல்பாடு இயக்குநரும், பயிற்சியாளருமான ரோலன்ட் ஓல்ட்மான்ஸ், “நாங்கள் எங்களுடைய ஆட்டத்தில் தீவிர கவனம் செலுத்துவது முக்கியமானதாகும். போட்டிக்கு போட்டி எங்களின் பலவீனமான விஷயங்களை கண்டறிந்து அதை சரி செய்து வருகிறோம். போட்டிக்கு போட்டி எங்களை மேம்படுத்த விரும்புகிறோம். உலகின் முதல்நிலை அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா சிறப்பாக விளையாடியிருக்கிறது. இந்த ஆட்டம் எங்களுக்கு ஏராளமான கோல் வாய்ப்பை கொடுத்தது. அந்த வாய்ப்புகள் ஆஸ்திரேலியாவை வீழ்த்த உதவியது” என்றார்.

இந்திய துணை கேப்டன் ஸ்ரீஜேஷ் கூறுகையில், “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த ஆட்டம்தான் எங்களுடைய கடைசி பயிற்சி ஆட்டம். அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக ஆடுவதற்காக நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பிறகு பெரிய அளவில் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறோம். இந்தப் போட்டியில் (சாம்பியன்ஸ் டிராபி) சாம்பியனாக முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x