Published : 09 Jul 2019 12:40 PM
Last Updated : 09 Jul 2019 12:40 PM

இந்தியாவில் ஆண்கள் கொல்லப்படும் விகிதம் குறைவு; பெண்கள் கொலை அதிகரிப்பு: ஐநா அறிக்கை

இந்தியாவில் ஆண்கள் கொல்லப்படும் விகிதம் குறைந்துள்ளதாகவும், இதில் பெண்களின் விகிதம் அதிரிகரித்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

 ’ஹோமோசைட்’ ( ஒருவர் மற்றொரு நபரால் கொல்லப்படுவது) பற்றிய  அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.

அதில், “இந்தியாவில் தனி நபர் சார்ந்த கொலை  ( ஹோமோசைட்) விகிதத்தில் ஆண்கள் எண்ணிக்கை சமீப ஆண்டுகளாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் பெண்களின் எண்ணிக்கை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 2000-ம் ஆண்டு கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 15,196 ஆக இருந்த நிலையில் 2016-ல் 18, 016 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஆண்களின் எண்ணிகை 2006 -ல் 32,971 ஆக இருந்த நிலையில் 2016-ம் ஆண்டில் 24,662 ஆகக் குறைந்துள்ளது.

இதில் வரதட்சணைக் கொடுமை காரணமாக பெண்கள் கொல்லப்படும் எண்ணிக்கை 2006 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை அதிகரித்து வருகிறது. இதில் தனி நபர் சார்ந்த கொலை வழக்குகளில் இந்தியாவைப் பொறுத்தவரை மும்பையில் குறைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

உலக அளவில் 2017 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 4,64,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இது அரசு அடக்குமுறைகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட 87,000 பேர் அதிகம் என்றும் ஐநா தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x