Last Updated : 06 Jul, 2017 07:42 AM

 

Published : 06 Jul 2017 07:42 AM
Last Updated : 06 Jul 2017 07:42 AM

தீவிரவாத ஒழிப்பு, வேளாண்மை, நீர் மேலாண்மை உட்பட இந்தியா - இஸ்ரேல் இடையே 7 ஒப்பந்தம்: பிரதமர் மோடி, நெதன்யாகு முன்னிலையில் கையெழுத்து

இந்தியா இஸ்ரேல் இடையே, தீவிரவாத ஒழிப்பு, விண்வெளி ஆராய்ச்சி, வேளாண்மை, நீர் மேலாண்மை உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை பலப்படுத்துவது தொடர்பாக 7 ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாயின.

இந்தியா, இஸ்ரேல் இடையே கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தூதரக உறவு நீடிக்கிறது. ஆனால் பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையே நீடித்து வரும் பிரச்சினை காரணமாக இந்திய பிரதமர்கள் யாரும் இஸ்ரேல் சென்றது இல்லை.

இந்நிலையில், முதல்முறை யாக பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் இஸ்ரேல் சென்றார். அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மூத்த அமைச்சர்கள் டெல் அவிவ் விமான நிலையத்துக்கே நேரில் சென்று மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடிக்கு, ஜெருசலே மில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்தில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. அப்போது இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேற்று அதிகார பூர்வமாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படு வது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு, வேளாண் தொழில்நுட்பம், நீர் மேலாண்மை, விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட 7 முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை பலப் படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பின்னர் இருவரும் செய்தியாளர் களுக்கு கூட்டாக பேட்டி யளித்தனர்.

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:

இரு நாட்டு மக்களுக்கு இடையே உள்ள உறவை பலப் படுத்த வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இரு நாட்டுக்கும் பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு துறைகளில் ஏற்கெனவே உள்ள ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

அதிகரித்து வரும் மத அடிப் படைவாதமும் தீவிரவாதமும் சர்வதேச அளவில் மட்டுமல் லாது இரு நாடுகளின் பிராந்திய அமைதிக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதை எதிர்த்துப் போரிடுவதில் தீவிரமாக இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்.

மேலும் தீவிரவாத அமைப்பு களுக்கு புகலிடம் வழங்குவோர் (பாகிஸ்தான்) மீதும் அவற்றுக்கு நிதியுதவி செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும் உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறும்போது, “மும்பையில் 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதல் மிகவும் மோசமானது. எனவே, தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது” என்றார்.

சிறுவனை சந்தித்தார் மோடி

மும்பை தாக்குதலில் உயிர் தப்பிய இஸ்ரேல் சிறுவன் மோஷி ஹால்ட்ஸ்பெர்கை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். அப்போது அந்த சிறுவனை ஆரத் தழுவினார். அப்போது மோஷி கூறும்போது, “டியர் திரு மோடி, நான் உங்களையும் உங்கள் நாட்டு மக்களையும் நேசிக்கிறேன்” என்றார்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் 2008-ம் ஆண்டு மும்பையில் உள்ள முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். இதில் மோஷியின் பெற்றோர் ரிவ்கா மற்றும் காவ்ரியேல் ஹால்ட்ஸ்பெர்க் உள்ளிட்ட 8 பேர் பலியாயினர்.

இந்தத் தாக்குதலின்போது இந்திய பெண் சான்ட்ரா சாமு வேல்ஸ், உயிரை பணயம் வைத்து 2 வயது குழந்தையாக இருந்த மோஷியை காப்பாற்றினார். இதையடுத்து, மோஷி இஸ்ரே லில் தனது தாத்தா, பாட்டியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி, இப்போது 11 வயதாகும் சிறுவன் மோஷி, அவனது தாத்தா, பாட்டி மற்றும் சான்ட்ரா சாமுவேல்ஸ் ஆகியோரை நேற்று சந்தித்தார்.

முன்னதாக, இதுகுறித்து மோஷியின் தாத்தா ஷிமோன் கூறும்போது, “மோஷியை பிரதமர் மோடி பார்க்க விரும்புவ தாக கூறியபோது, என்னால் நம்ப முடியவில்லை. அப்போது இந்தியா எங்களை மறக்க வில்லை, மோஷியின் 13-வது வயதில் ‘பார் மிதாவ்’ நிகழ்ச்சியை (உபநயனா) மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் கலந்து கொள்ள மோடியை அழைப்பேன் என்றார் ஷிமோன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x