Last Updated : 13 Jul, 2017 10:44 AM

 

Published : 13 Jul 2017 10:44 AM
Last Updated : 13 Jul 2017 10:44 AM

அமெரிக்க விமான விபத்தில் இந்திய தம்பதி பலி

அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் உள்ள லோகன்ஸ் போர்ட் பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த உமா மகேஸ்வர காலாபடப்பு (63), சீதா கீதா காலாபடப்பு ஆகியோர் வசித்தனர். பிஸியோதெரபி மருத்துவர்களான இருவரும் கடந்த 1995-ம் ஆண்டு அப்பகுதியில் ‘ராஜ் கிளினிக்’ என்ற பெயரில் மருத்துவமனையைத் தொடங்கி நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தனியாருக்குச் சொந்தமான சிறிய ரக விமானத்தில் கடந்த 8-ம் தேதி இருவரும் பயணித்தனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் ஓகியோ மாகாணத்தில் உள்ள பெவர்லி கிராமப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் இருவரும் உடல் கருகி உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x