Last Updated : 17 Nov, 2014 06:38 PM

 

Published : 17 Nov 2014 06:38 PM
Last Updated : 17 Nov 2014 06:38 PM

சீனாவில் உணவு பேக் செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து: 18 பேர் பலி

சீனாவில் உள்ள ஷாண்டாங் மாகாணத்தின் காரட் பேக் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்திற்கு 18 பேர் பலியாகியுள்ளனர். 13 பேர் காயமடைந்தனர்.

சீனாவின் மிகமுக்கிய வேளாண் உற்பத்தி மையமான ஷுகுவாங் நகரில் உள்ள லாங்க்யுவன் உணவு நிறுவனத்தில் நேற்று இரவு 7 மணியளவில் பெரும் தீ மூண்டது.

உடனடியாக தீயணைப்புப் படை விரைந்தாலும் தீயை அணைக்க இரண்டரை மணிநேரம் போராட வேண்டி வந்தது.

தீப்பிடித்த சமயத்தில் 140 பேர் உள்ளே இருந்ததாகத் தெரிகிறது.

ஆனால் பலர் தீப்பிடித்தவுடன் தப்பி ஓடினர். இருப்பினும் உள்ளே அகப்பட்டச் சிலரில் 18 பேர் பலியாகியுள்ள சம்பவம் அங்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீப்பிடிப்பிற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நிறுவனத்தின் மேலாளர்களை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1998-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட லாங்க்யுவன் நிறுவனம், ஒரு ஏற்றுமதி நிறுவனம் என்பதும், இதில் சுமார் 200 பேர் பணியாற்றிவருவதும் குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு 50,000 டன்கள் உற்பத்தித் திறன் கொண்ட தொழிற்சாலையாகும் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x