Published : 27 Mar 2014 10:50 AM
Last Updated : 27 Mar 2014 10:50 AM

மனித உரிமை மீறல் புகார் விவகாரம்: விரிவான விசாரணை கோருகிறது இலங்கை மீதான அமெரிக்காவின் திருத்திய தீர்மான வரைவு

ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா முன் வைத்துள்ள வரைவு தீர்மானம் 3வது முறையாக திருத்தப்பட்டுள்ளது. படித்த படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணை யம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட காலத்தில் இலங்கையில் இரு தரப்பிலும் நடந்த (ராணுவம், விடுதலைப்புலிகள்) அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்கள், அது சார்ந்த குற்றங்கள் பற்றி விரிவான சுதந்திரமான விசாரணை கோருகிறது இந்த திருத்திய வரைவு. இது உறுப்பு நாடுகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது.

தண்டனைக்கு உள்ளாவதிலிருந்து தப்பிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட மீறல் கள் மற்றும் குற்றங்களுக்கான சுழல்கள் மற்றும் அதுபற்றிய உண்மைகளை நிரூபித்தல் மற்றும் .சம்பந்தப்பட்ட நிபுணர்களின் தகவல்கள் உதவியுடன் பொறுப்புடைமையை உறுதி செய்வது ஆகியவற்றை தீர்மான வரைவு வலியுறுத்து கிறது என டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தனி ஈழம் கோரி நடந்த இனப் போராட்டம் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதற்காக அந்த போராட்டத்தில் கிடைத்த படிப்பினையை அறிய 2010ல் படித்த படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தை அமைத்தார் அதிபர் மகிந்த ராஜபக்சே.

2002 பிப்ரவரி 22க்கும் மே 19 2009க்கும் இடைப்பட்ட காலத்தை இந்த ஆணையம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அதிகாரம் தரப்பட்டது. அதாவது அமைதி ஏற்படுத்த நார்வே முயற்சி எடுத்ததிலிருந்து 30 ஆண்டுகால விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்தது வரைக்குமான இடைப்பட்ட காலம் இந்த ஆணையத்தின் விசாரணைக்குள் வந்தது. இந்தியாவின் வற்புறுத்தலால்தான் இந்த ஆணையம் விசாரணை நடத்திய காலமும் சேர்க்கப் பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

இலங்கை தேச அளவில் உருப்படியான பலன் தரும் நடவடிக்கைகளுக்கு இடம் இல்லாத நிலையில் சர்வதேச விசாரணை நடத்தவேண்டியதன் அவசியம் மற்றும் தொடரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐநா மனித உரிமை ஆணை யரின் பரிந்துரைகளை உறுப்பு நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என தீர்மானம் வலியுறுத்துகிறது.

ஐநா மனித உரிமை அமைப்பின் தலைவர் நவி பிள்ளை அறிக்கையின் அடிப்படையில் மனித உரிமை மீறல் புகார் பற்றி சர்வதேச புலனாய்வு கோரும் தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்ய உள்ளது. இதற்கு பிரிட்டனும் ஆத ரவாக இருக்கிறது.

இந்நிலையில் நவி பிள்ளை பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள இலங்கை, மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச விசாரணையை தொடங்கியுள்ளதால் அவரது நடுநிலைமை மீது சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x