Last Updated : 22 Nov, 2014 11:12 AM

 

Published : 22 Nov 2014 11:12 AM
Last Updated : 22 Nov 2014 11:12 AM

கொலை செய்யப்பட்ட‌ ஹோண்டுராஸ் அழகி உடல் அடக்கம்

சில நாட்களுக்கு முன்பு மாயமான ஹோண்டுராஸ் நாட்டு அழகியும், அவரது சகோதரி யும் கொல்லப்பட்டனர். அந்த இருவரது உடல்களும் நேற்று அடக்கம் செய்யப்பட்டன.

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் மரியா ஜோஸ் அல்வராடோ வாழ்ந்து வந்தார். இவர் அந்நாட்டு அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். இவர் இந்த வாரம் புதன்கிழமை நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார்.

ஆனால் கடந்த வியாழக் கிழமை தனது சகோதரி சோபியாவுடன் மரியா திடீரென்று மாயமானார். அதைத் தொடர்ந்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இருவரது உடல்களும் அகுவாகுவால் நதிக்கரையில் பாதி புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கொலையில் சோபியா வின் நண்பரான ப்ளுடார்கோ ரியூஸ் என்பவருக்குத் தொடர் பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரைக் கைது செய்தனர்.

விசாரணையின்போது தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில், சோபியா வேறு ஓர் ஆணுடன் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்து அதனால் ஏற்பட்ட பொறா மையால் சோபியாவையும், மரியாவையும் சுட்டுக் கொன்ற தாக ரியூஸ் கூறியதாக போலீ ஸார் கூறினர்.

இதைத் தொடர்ந்து, பிரதேசப் பரிசோதனைகள் எல்லாம் முடிந்து அந்த இருவரது உடல்களும் சாண்டா பார்பராவில் அடக்கம் செய்யப்பட்டன. கொல்லப்பட்ட அந்த இருவருக்காகவும் வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அஞ்சலிக் கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

ஹோண்டுராஸ் நாட்டில் 2005 மற்றும் 2013ம் ஆண்டுகளுக் கிடையே பெண்கள் மிகக் கொடூர மாகக் கொலை செய்யப்பட்ட எண் ணிக்கையின் அளவு 263.4 சதவீத மாக உயர்ந்துள்ளது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x