Published : 07 Feb 2017 09:55 AM
Last Updated : 07 Feb 2017 09:55 AM

சவுதி அரேபியாவில் முதல்முறையாக மகளிர் தினம்: மன்னர் குடும்பம் பங்கேற்பு

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் முதல்முறையாக மகளிர் தினம் கொண்டாடப்பட வுள்ளது.

தலைநகர் ரியாத்தில் உள்ள கலாச்சார மையத்தில் இதற்காக 3 நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழா வில் ஆணாதிக்க முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பெண் உரிமைக்காக போராடியவர்கள் முக்கிய பேச்சாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர். சவூதி மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் பங்கேற்கின்றனர். குறிப்பாக கல்வித் துறையில் பெண்களின் பங்கு குறித்து இளவரசி அல்-ஜவ்ஹரா பிண்ட் பஹத் பேசுகிறார்.

இது குறித்து கலாச்சார மையத்தின் செய்தித்தொடர்பாளர் முகமது அல்-சையப் கூறும்போது, ‘‘கல்வி, கலாச்சாரம், மருத்துவம், இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சவூதி பெண்களின் சாதனை, அவர்களது பங்கு ஆகியவை குறித்து இந்த 3 நாளும் பேசப்படவுள்ளது. அவர் களது சாதனைகளை கொண் டாடப் போகிறோம்’’ என்றார்.

சவுதியில் பெண்களுக்கான உரிமை நசுக்கப்பட்டதால், அந்நாட்டு அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பாலின சமன்பாடு தொடர்பான சர்வதேச அறிக்கையிலும் கடந்த 2015-ம் ஆண்டில் சவுதி மொத்தம் உள்ள 145 இடங்களில் 134-வது இடத்தை பிடித்திருந்தது. உலகிலேயே சவுதியில் மட்டுமே பெண்கள் வாகனம் ஓட்டுவற்கும், அதற்கான உரிமங்கள் பெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடை நீக்கும்படி போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதனால் கலாச்சாரம் மற்றும் பொருளாதார விவகாரங்களில் சீர்த்திருத்தங்கள் கொண்டு வர சவுதி அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு அந்நாட்டின் மத ஆணையம் கடும் எதிர்ப்பு தெரி வித்து வருகிறது. திரைப்படங் களை கண்டுகளிப்பது, விழாக்கள் நடத்துவது ஆகியவற்றை சட்டப் பூர்வமாக மாற்றினால் பாலியல் தொடர்பான ஒழுக்கங்கள் சீர்கெடும் என்றும் நாத்திகவாதம் தலைதூக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x