Published : 04 Jun 2016 10:33 AM
Last Updated : 04 Jun 2016 10:33 AM

55% தீவிரவாத தாக்குதல்கள் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 5 நாடுகளில் நிகழ்ந்துள்ளன: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு நிகழ்ந்த தீவிரவாத சம்பவங்களில் 55 சதவீதம் வரை இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 5 நாடுகளில் மட்டுமே நிகழ்ந்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தீவிரவாத தடுப்பு அமைப்புக்கான தற்காலிக ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் சிபேரெல் கடந்த வியாழக்கிழமை நடந்த பத்திரிகையாளர்கள் கருத்தரங்கில் பேசியதாவது:

இந்தியா, பாகிஸ்தான், இராக், ஆப்கானிஸ்தான், நைஜீரியா ஆகிய 5 நாடுகளில் தான் 55 சதவீத அளவுக்கு தீவிர வாத தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த 5 நாடு களிலும் நிகழ்ந்த உயிரிழப்புகளில் 74 சதவீதம் வரை தீவிரவாத தாக்குதல்களால் நடந்தவை. மேரிலேண்ட் பல்கலைக்கழகம் தொகுத்து வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த விவரம் தெரியவந்துள்ளன.

உலகம் முழுவதும் 2014-ல் நடந்ததை விட, 13 சதவீதம் அளவுக்கு 2015-ல் தீவிரவாத சம்பவங்கள் சற்று குழைந்துள் ளன. அதே சமயம் ஆப்கானிஸ் தான், வங்கதேசம், எகிப்து, சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் கடந்த ஆண்டு தீவிரவாத தாக்குதல்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித் துள்ளது.

ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளை ஆக்கிரமிக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x