Published : 10 Jan 2014 12:00 AM
Last Updated : 10 Jan 2014 12:00 AM

அமெரிக்க உளவு அமைப்புக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க ஒபாமா திட்டம்

தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்.எஸ்.ஏ.) தொலைபேசி ஒட்டுக் கேட்பு மூலம் வேவு பார்க்கும் பணியை கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க உளவு நிறுவனமான என்.எஸ்.ஏ., வெளிநாட்டுத் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை உளவறிந்து வருவதாக தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து என்.எஸ்.ஏ. வின் வேவு பார்க்கும் பணிகள் குறித்து மறுபரிசீலனை செய்ய அமெரிக்க அதிபர் மாளிகை நடவடிக்கை எடுத்தது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு, தனது பரிந்துரைகளை அளித்துவிட்டது. இதை பரிசீலித்துவரும் ஒபாமா, முக்கிய முடிவுகளை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளார். முன்னதாக நாடாளுமன்ற உறுப் பினர்களை சந்தித்து ஒபாமா ஆலோசனை நடத்தவுள்ளார். தகவல் தொழில்நுட்ப நிறுவன பிரதிநிதிகளும் தங்களின் கருத்துகளை அதிபரிடம் தெரிவிக்க உள்ளனர் என்று அதிபர் மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.

என்.எஸ்.ஏ.வுக்கு கட்டுப்பாடு விதிக்கும்வகையில் ஆய்வுக் குழு சார்பில் பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள சில முக்கிய பரிந்துரைகள்: “உளவுப் பணிகளில் முன்னுரிமை அளிப்பது தொடர்பான கொள்கைகளை வகுக்கும் அலுவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் பிற நாடுகளை, குறிப்பாக கூட்டாளி நாடுகளை வேவு பார்க்கும் பணியை கட்டுப்படுத்தும் வகையில் கொள்கைகளை வகுக்க முடியும்.

தொலைபேசி உரையாடல் பதிவுகள் தொடர்பான தரவுகள் அனைத்தும் இப்போது என்.எஸ்.ஏ.வசமே இருக்கும் வகை யில் விதிமுறை உள்ளது. இதை மாற்றி, அந்த தொலைபேசி உரையாடல் பதிவுகள் அனைத் தும் சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனத்திடமோ, அல்லது வேறொரு அமைப்பிடமோ ஒப்ப டைக்க வேண்டும். என்.எஸ்.ஏ.வுக்கு தேவைப்படும் தொலைபேசி உரையாடல் பதிவுகளை மட்டும் நீதிமன்றத்தின் அனுமதியுடன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x