Last Updated : 23 Jun, 2016 10:20 AM

 

Published : 23 Jun 2016 10:20 AM
Last Updated : 23 Jun 2016 10:20 AM

சீனா, ரஷ்யாவைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உதவுகிறது அமெரிக்கா: என்எஸ்ஜி விவகாரத்தில் பாகிஸ்தான் குற்றச்சாட்டு

சீனாவைக் கட்டுப்படுத்த வேண் டும், ரஷ்யாவை மீண்டும் தலை தூக்க விடக்கூடாது என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகவே, அணுசக்தி விநியோக குழுவில் (என்எஸ்ஜி) இணையும் இந்தியா வுக்கு அமெரிக்கா உதவி வரு கிறது என பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

‘பாகிஸ்தான்ஸ் கேஸ் பார் என்எஸ்ஏ மெம்பர்ஷிப்’ என்ற கருத்தரங்கில் நேற்று முன்தினம் பங்கேற்ற பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாசர் ஜன்ஜுவா கூறியதாவது:

48 நாடுகளின் கூட்டமைப்பான அணுசக்தி விநியோகக் குழுவில் இந்தியாவைச் சேர்க்கும் முயற்சி யில் அமெரிக்கா ஈடுபட்டிருப்பது, உலக வல்லரசு அரசியல் தொடர் பானது.

சீனாவைக் கட்டுப்படுத்துவது, ரஷ்யா மீண்டும் எழுச்சி பெறாமல் பார்த்துக் கொள்வது, இஸ்லாமிய நாடுகளை தொடர்ந்து குழப்பத்தில் இருக்கும்படியான கட்டுப்பாட்டில் வைப்பது உள்ளிட்டவை உலக வல்லரசு அரசியலின் முக்கியமான அங்கமாகும்.

இந்த திட்டத்தை செயல்படுத் தும் அமெரிக்காவின் கொள் கைகளால், பாகிஸ்தான் சீனாவுடன் மிகவும் நெருக்கமாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகவலை வெளியிட்டுள்ள ‘தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன்’, பாகிஸ்தானின் உயரதிகாரி ஒருவர், மிகமுக்கியமான விவகாரத்தில் இதுபோன்று பகிரங்கமாக கருத்து தெரிவித்திருப்பது இதுவே முதல் முறை எனவும் குறிப்பிட்டுள்ளது.

தென்கொரிய தலைநகர் சியோ லில் என்எஸ்ஜியின் வருடாந்திர கூட்டம் நாளை தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் சியோல் புறப் பட்டுச் சென்றார்.

சீனா விளக்கம்

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறியதாவது:

சியோல் அமர்வில், குறிப்பிட்ட நாடுகளை என்எஸ்ஜியில் இணைப்பது தொடர்பான கலந்தா லோசனை நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ளது. அதேசமயம், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத் தில் கையொப்பமிட்ட நாடுகளைச் சேர்ப்பது தொடர்பான கலந்தா லோசனை மட்டுமே நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளது.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையொப்பமிடாத நாடுகள். இக் குழுவில் இணைப்பது பற்றிய விவாதம் ஒருபோதும் நிகழ்ச்சிநிரலில் இடம்பெறவில்லை. ஆனால் அனைத்து உறுப்பு நாடுகளும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இல்லாத நாடு கள் நுழைவது குறித்த முக்கியத் துவத்தை புரிந்து கொண்டுள்ள னர். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இல்லாத நாடுகள் என்எஸ்ஜி.யில் சேர்க்கப்படுவதற் கான நிகழ்ச்சித் திட்டம் இந்த கூட்டத்தில் இல்லை எனும்போது, இந்தியா உறுப்பினராவதற்கான விவாதங்களை நாங்கள்தான் முடக்குகிறோம் என்று கூறுவதில் அர்த்தமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சீன அதிபரை சந்திக்கிறார் மோடி

உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட்டில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 16-வது 2 நாள் மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசைன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட 6 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளார். அப்போது என்எஸ்ஜி.யில் இந்தியாவை உறுப்பினராக சேர்க்க நிபந்தனையற்ற ஆதரவு தர வேண்டும் என்று ஜி ஜின்பிங்கை மோடி வலியுறுத்த உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x