Last Updated : 23 Nov, 2014 12:15 PM

 

Published : 23 Nov 2014 12:15 PM
Last Updated : 23 Nov 2014 12:15 PM

குழந்தைத் திருமணங்களை தடுக்க ஐ.நா. தீர்மானம்

குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்காக, ஐக்கிய நாடுகள் மன்றம் முதன்முறையாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் உலகின் பல நாடுகளில் குழந்தைத் திருமண நடவடிக்கைகள் பெருமளவு தடுக் கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

உலகெங்கும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1 கோடியே 50 லட்சம் பெண் குழந்தைகள் குழந்தைத் திருமணத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் 70 கோடி பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணத்தில் ஈடுபடுத்தப் படுகிறார்கள் என்று ஐ.நா. கூறியுள்ளது.

இந்த நிலை இப்படியே நீண்டால் 2050 ஆண்டுக்குள் சுமார் 120 கோடி பெண் குழந்தை களுக்குக் குழந்தைத் திருமணம் நடைபெற்றிருக்கும் எனவும் அது கூறியுள்ளது. இதில் நைஜர், வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில்தான் அதிக அளவில் பெண் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைத் திருமணத்துக்கு எதிரான சட்டங்கள்..

இந்த முறையை ஒழிப்பதற்கு கனடா மற்றும் சாம்பியா ஆகிய நாடுகள், உலகின் மற்ற நாடுகளை குழந்தைத் திருமணத்துக்கு எதிரான சட்டங்களை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளன. ஆனால் பிரித்தானியாவோ, குழந்தைகளுக்கு முறையான பாலியல் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்றும், தங்களின் பாலினம் குறித்த உரிமைகளைப் பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

குழந்தைத் திருமணத்தை வறுமை, பாதுகாப்பின்மை மற்றும் மரபுரீதியான வழக்கங்கள் ஆகியவற்றோடு தொடர்புபடுத்தி, குழந்தைத் திருமணங்களுக்கு எதிரான சட்டத்தை இயற்றுவ தற்கு வாடிகன் பிரதிநிதி ஒப்புக் கொண்டுள்ளார். எனினும், பாலியல் கல்வி மற்றும் உரிமை தொடர்பான கருத்துகளை அவர் எதிர்த்துள்ளார்.

இந்தக் கருத்துகள் எல்லாம் தொகுக்கப்பட்டு பொது சபைக் கூட்டக் குழுவினர் தீர்மான மாக நிறைவேற்ற ஒப்புக்கொண்டுள்ளனர். அடுத்த மாதத் தில் நடைபெறும் பொதுக் கூட்டத் தில் இவை நிறைவேற் றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x