Last Updated : 01 Aug, 2016 02:41 PM

 

Published : 01 Aug 2016 02:41 PM
Last Updated : 01 Aug 2016 02:41 PM

அனைத்து மதங்களையும் கலாச்சாரங்களையும் மதிக்க வேண்டும்: லண்டனில் மோகன் பாகவத் பேச்சு

உலகிலுள்ள அனைத்து மதங்களும், கலாச்சாரங்களும் மதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் உலகில் வளம் செழிக்கும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.

லண்டனில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சமஸ்கிருத மகாஷிபிர் அமைப்பின் சார்பில் நடைபெற்ற கலச்சார நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்நிகழ்வில் ஐரோப்பியாவைச் சேர்ந்த 2,200 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய மோகன் பாகவத், “இந்து மதம் என்பது அனைத்துப் பொருளையும் தன்னகத்தே உள்ளடக்கியது. இந்து மதம் வாழ்வியல் முறைகளை கற்றுத் தருகிறது. இந்த உலகம் ஒரே குடும்பத்தால் ஆனது. இங்கு அனைத்து மதங்களும், அனைத்துக் கலாச்சாரங்களும் மதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் உலகில் வளம் செழிக்கும்.

உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் ஆரோக்கியமான உடல் நலத்தைப் பெறலாம். ஆரோக்கியமான சமூதாயமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இட்டுச்செல்லும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x