Last Updated : 18 Jan, 2014 11:33 AM

 

Published : 18 Jan 2014 11:33 AM
Last Updated : 18 Jan 2014 11:33 AM

சகோதரனை சுட்டுக் கொன்ற 4 வயது குழந்தை

அமெரிக்காவில் துப்பாக்கியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது, 4 வயது பெண் குழந்தை அதே வயதுடைய தனது ஒன்று விட்ட சகோதரனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது.

டெட்ராய்ட் நகரின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த அந்த பெண் குழந்தை வியாழக்கிழமை தனது வீட்டில் பெற்றோரின் உடன் பிறந்தோரின் 2 மகன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது விளையாட்டாக துப்பாக்கியை இயக்கியபோது 4 வயது ஆண் குழந்தை மீது குண்டு பாய்ந்து இறந்தது. 5 வயதுடைய மற்றொரு குழந்தை அதிர்ஷ்டவசமாக தப்பியது.

3 குழந்தைகளும் தங்களது வீட்டின் படுக்கையறையில் இருந்த துப்பாக்கியை எடுத்து வைத்துக் கொண்டு விளையாடியபோது இந்த சம்பம் நடைபெற்றதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் டெட்ராய்ட் காவல் துறை மக்கள் தொடர்பு அதிகாரி ஆடம் மாதேரா தெரிவித்தார்.

வடக்கு கரோலினாவின் பயட்வில்லேயில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இரண்டு வயது பெண் குழந்தை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டது. இதுபோல கடந்த அக்டோபர் மாதம் 5 வயது குழந்தை ஒன்று துப்பாக்கியால் சுட்டுக் கொண்டது.

அமெரிக்காவில் குழந்தைகள் கையில் துப்பாக்கி எளிதாகக் கிடைப்பதால் இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நிகழ்ந்தவண்ணம் உள்ளது. கடந்த 2001 முதல் 2010 வரையில் துப்பாக்கி விபத்துகளால் 15 வயதுக்குட்பட்ட 703 குழந்தைகள் மரணமடைந்ததாகவும் 7,766 குழந்தைகள் காயமடைந்ததாகவும் புள்ளிவிவரம் கூறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x