Published : 25 Sep 2016 12:09 PM
Last Updated : 25 Sep 2016 12:09 PM

அமெரிக்காவில் வசித்து வரும் பலுசிஸ்தானியர், இந்தியர்கள் பாகிஸ்தானை கண்டித்து போராட்டம்

அமெரிக்காவில் வசித்து வரும் பலுசிஸ்தானியர்களும் இந்திய வம்சாவளியினரும் பாகிஸ்தானின் மனித உரிமை மீறல் செயலைக் கண்டித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெக்சாஸ் மாகாணத்தின் ஹுஸ் டன் நகரில் உள்ள பாகிஸ்தான் துணைத் தூதரகத்துக்கு வெளியே இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்களும் இந்திய வம்சாவளியினரும் பங்கேற் றனர். பாகிஸ்தானில் சிறுபான்மை யினர், பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான செயல்கள் நடைபெறுவதாகக் கூறி கோஷம் எழுப்பினர்.

இது தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கையில் ஏந்தி இருந்தனர். மேலும் காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் ராணுவ முகாம் மீது தீவிரவாதி கள் நடத்திய தாக்குதல் கோழைத் தனமானது என்றும் கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

மனித உரிமை மீறல், ஆள்கடத்தல், பெண்களுக்கு எதிரான பலாத்காரம் உள்ளிட்ட செயலில் ஈடுபடும் பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2 மூத்த உறுப்பினர்கள் ஒரு மசோதாவை தாக்கல் செய்த நிலையில் இந்தப் போராட்டம் நடந்துள்ளது.

மேலும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஐ.நா. பொது கூட்டத்தில் பேசும்போது காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். அங்கு என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட தீவிரவாதிக்கு ஆதரவாக பேசினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய அதிகாரி ஏனம் கம்பீர் பேசும்போது, “பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து ஊக்குவிக்கிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு எதிராக தீவிரவாதிகளை ஏவி விடுகிறது” என்று கடுமையாக குற்றம்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போராட்டத்தின் இறுதியில், அமெரிக்க மற்றும் இந்திய தேசிய கிதம் பாடப் பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x